பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் I 35 - என்கிற ரீதியில், என் தவறை எனக்கு அச்சுறுத்தும் வகையில். நான் சென்றபோது அந்த அம்மா ஏதோ வேலையாய்ச் சமையலறையில் இருந்தார்கள். நேரே போய், காலடியில் நெடுஞ்சாங்கடையாக விழுந்துவிட்டேன். வேறு தோன்ற வில்லை . "யாரு ராமாமிருதமா, எழுந்திரு. ஏம்பா, நீ இப்படிச் செய்யலாமா? மற்றவர்களையெல்லாம் எனக்கு எழுத்தாளர் கள் என்கிற முறையில்தான் தெரியும். ஆனால் உன்னை நான் லா.ச.ரா. வாக நினைக்கவில்லை. எனக்கு ராமாமிருதத் தைத்தான் தெரியும். இன்றைய நேத்தைய பழக்கமா? கலியானமான கையுடன் நாங்கள் நாகப்பையர் தெருச் சந்து வீட்டு மாடிக்கு குடித்தனம் வந்தபோது, நீ கீழே உன் சித்தப்பாவோடு இருந்தே, அப்போ எஸ் எஸ்.எல்.சி. படிச் சிண்டிருந்தையா? நீ இப்படிச் செய்யலாமா?” அவள் அழுது என்னைச் சங்கடத்தில் ஆழ்த்தவில்லை. ஆனால் அப்படி அவள் கேட்கையில், வாயடைத்துப்போய், கண்ணிர் மல்க நின்றேன். மகரம் சமயவரமாய், என்னை ஓரளவுக்கு எனக்கு மீட்டுக்கொடுத்தார். ஆனால் இங்கே என் குற்றத்தை ஒப்புக்கொள்வதில் என் பிராயச்சித்தத்தைத் தேடுவதாக நினைத்துக்கொள்கிறேன். தவிர, சமயத்தின் கவிநயம் எப்படியெல்லாம் ஒளிந்து கொள்கிறது, சமயத்தின் சத்யம் எப்படியெல்லாம் வெளிப் படுத்திக்கொள்கிறது என்பதையும் தெரிந்துகொண்டே விருக்கிறேன். -குங்குமம்