பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் § எதனால்தான் என்ன பிரயோசனம்? இது பயன் இது பவனில்லை என்து தீர்மானிக்க தான் யார்? உலகில் உயிரற்றது எதுவுமில்லை. கால, எண், வரைகளற்று ஜீவதாதுக்கள் சதாசர்வ: காலம் நம்மைச் சுற்றி, நீந்திக்கொண்டேயிருக்கின்றன. ஏதோ ஒரு வாக்கியத்திலோ சொற்றொடரிலோ, குரலின் அசைவினோ, பதங்களிலோ, அல்லது இரு பதங் களிடையில் தொக்கி, என்னுள்ளே நின்று, என் நினைவின் ஒட்டத்தைச் சட்டெனத் தடுக்கும் ஒரு அனுநேர மெளனத் திலோ ஒரு கடைக்கண்ணோக்கிலோ, ஒரு பெருமூச்சிலோ, விழிகளில் நடுங்கும் கண்ணின் பளபளப்பிலோ, ஒரு புன்ன கையில் மோவாவின் குழிவிலோ, நீரின் சுழியிலோ, குசஆடி விருந்து குத்து விளக்கின் திரிக்கு அர்ரென்று தாவும் சுடரின் சிறவிலோ, புருவத்தின்மேல் வாடைக் காற்றின் முத்தத் திலோ, ஒரு பூவின் இதழ்களின் விரியவிலோ, அஜ்ஜீவதாதுக் கள் என்னை ஊடுருவுகையில், என்னை அடைத்த கோடு களை அழித்து என்னை ஊடுருவிய அந்த வேகத்தின் நேரத்துக்கு, தம்முடன் நித்யத்துவத்திற்கு அழைத்துச் செல்கின்றன. அப்பொழுது நான் என்னைப் பத்துமுறையில் காண்கிறேன். நான் அழிவற்றவன். எனக்கு அழிவிலாதபடி என்னையே லட்சக்கணக்காது பெருக்கிக்கொள்கிறேன். அதுவே அந்நிலையின் இயல்பு. என்னைச் சுற்றி அகண்டமான அர்த்தங்கள், , வர்ணங்களில் மீன்போல், வாலையும், செதிள்களையும் ஆட்டிக்கொண்டு சாவகாசமாயும், நட்சத்திரங்கள்போல் பொறி விட்டுக்கொண்டு, கண்ணுக்கும் நினைவுக்கும் எட்டாத வேகத்திலும் நீந்துகின்றன.