பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள் I 39 பெரிய கற்கண்டுக் கட்டியாட்டம் வெள்ளி, நான் போகும் வழியில் என்னை முன்னிட்டுண்டு ஆகாசத்தில் தொங்கறது. வெள்ளின்னு நrத்ரம் உண்டுன்னு இங்கு வந்துதான் தெரியும். சூரியனின் புறப்பாடு வர்ணங்கள் தோய ஆரம்பிச்சதுமே, இது மங்கி இதன் பெருமை மங்கி இதுவும் அந்தப் பெரிய வெளிச்சத்தில் மறைஞ்சுடும் என் கிறதைப் போகும் வழிக்குப் பொழுது போக்கா நெனச்சுண்டு போனாலே அதுவே ஒரு ருசியான துக்கமாயிருக்கு. தினம் அலைக்கழிக்கிற இடையன் , இன்னிக்கு எனக்கு முன்னாலேயே வந்து நிக்கறான். இல்லே உக்காந்துண்டிருக் கான். கன்னுக்குட்டியை, மாட்டின் முன்னங்காலில் அனை கயிறால் பிணைச்சிட்டு மாட்டின் வயத்தில் தலையை முட்டிண்டு, கறக்கத் தயாரா-குவளையைக் கூட அவனிடம் கொடுக்கப்போயிட்டா, கரெக்டா நான் போய்ச் சேர்ந்தேன். ஒடிப்போய்ப் பிடுங்கிக் கவிழ்த்தா-கொட்டறது ஒரு ஆழாக்குத் தண்ணி, 'ஈ தே ம் பாடே! தெலுங்கில் என்னவோ கத்தறா. "ஆதி கிழவி, பிசாசு நானும் கத்தறேன். எப்படாப்பா யார் ஏமாறுவான்னு காத்திண்டிருக்கா பாவி! ஆனால் எனக்கு உள்ளுர அவள் திருட்டைக் கண்டு பிடிச்சுட்ட பெருமை பொங்கறது. இவள் இன்னும் ஏதேனும் ராrஸ் மாயம் பண்ணுவா. ராமலகல் மணா யாகம் கடத்த மாதிரி (தாத்தா கதை சொல்லியிருக்கா) மாட்டைச் சுத்திச் சுத்தி வரேன். அவள் தன் பாஷையில் கத்திண்டேயிருக்கா, கத்தட்டும். 'க்றிங் கிளிங்: க் நீங்ங்: ஆரம்பத்தில் இனிய சத்தத் துடன் குவளையில் இறங்கிய பீறல்கள் குவளையில் பால் உயர உயர, மெத்து மெத்து என்பதை நின்று சுவாரஸ்டி,