பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 ாே ச. ராமாமிருதம் மாசுக் கவனித்துக் கொண்டிருக்கையில், என் கண் திடீரென ஈரத்தில் வெதவெதக்கிறது. கண்களைக் கசக்கிக்கொள் கிறேன். மொட்டை சிரிக்கிறான். மொட்டைக்குத் தலை நிறைய மயிர்; ஆனால் மொட்டைன்னு பேர் ஏன் தேசியல்லே. இம்மாதிரி மாறி மாறி, இரு கண்களிலும் மாட்டின் அடியிலிருந்து தேரே எத்தனை பால் பீச்சல் வாங்கி அதனாலேயே விஷயங்களை அனுதாபத்துடன் பார்க்க ஆசிர்வாதம், கண்கள் பெற்றிருக்குமோ? அசட்டு எண்ணம், ஆனால் எவ்வளவு பிடித்தமான எண்ணம் ஒருவேளை, எண்ணத்தில் அசடு இல்லையோ? 率 密 染” காலை ஆட்டிண்டு குறடுத் திண்ணையில் உட்கார்ந் திருக்கேன், சூரியன் உச்சி மண்டைக்கு நிக்கறான். ஆனால் அந்த வயசில் எனக்கு உச்சி வெய்யிலும் உச்சி நிலாவும் ஒண்னு தான் . முருகன் காலடியில் ஒரு கல்லைத் தேத் திண்டே வரான். 'ஏன் வெய்யில்லே குந்திட்டிருக்கே, மூஞ்சி குரங் காட்டம்! " 'ஷட் அப் கரிக்கட்டை உன்னால் ஒரு நாளும் என் மாதிரி சிவப்பு ஆக முடியாது. பொறாமை' 'மெய்தான். நான் அதுக்கு என்ன செய்ய முடியும்? கடவுள் எ ப்பிடிப் படைச்சானோ அப்பிடி. எனக்குச் செழுப் பாகி என்ன ஆவணும்? எனக்கு உன்மேல் பொறாமை யில்லே, எள்ளும் பச்சரிசியும் கலந்த மாதிரி நாம் எப்பவும் சினேகமாயிருந்தா சரி.” என் கோவம் பறந்தோடிப் போச்சு என்னால் வெகு நேரம் என் சிநேகிதனோடு கோவமாயிருக்க முடியாது.