பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 லா. ச. ராமாமிருதம் மெளனம் என்பது சும்மாயிருப்பதல்ல அது ஒரு ஸ்தாயி ஒரு குறிப்பிட்ட ஸ்தாயியில், கற்கள் கூட உடைந்து விடும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆயின் கதவுகள் திறப்பதற்கென்ன? ஆனால் இப்பரபரப்பில் எவ்வளவு நாழிகை இருக்க முடியும்? வேகம் ஒய ஆரம்பிக்கின்றது. திரும்பவில் நான் கீழே இறங்குகிறேன். அல்லது மேனோக்கி எழுகிறேன். என் மேலோ, கீழோ, மேலும் கீழுமோ திறந்த கதவுகள் தாமே, மெதுவாயும் வேகமாயும் மூடிக்கொள்கின்றன. வெள்ளம் பின்வாங்குகிறது. அதில் மிளிரும் மதிப்பற்ற பொக்கிஷங்களை பேராசையோடு இரு கைகளாலும் அக.ை வெள்ளத்தோடு வாரிக்கொண்டு கீழிறங்குகிறேன். அல்லது மேலெழுகிறேன். ஆனால் நான் இங்கு மீண்டதும் என்னிடம் ஏதும் இல்லை. எல்லாம் ஊமை கண்டு, சொல்லத் தவிக்கும் கனவு. இதுவே, எழுத்தாளன், படிப்பாளன், செயலாளன், சிந்தனையாளன், எல்லோருக்கும் பொதுவான அவஸ்தை, இதனின்று விடுதலை ஒரு பெரும் சாதனை, ஆறுதல்: படிதாண்டல் இல்லையா? விடுதலை உண்டோ இல்லையோ, கண்டது கண்டதுதான். அறிந்தது அறிந்ததுதான். சொல்ல முடியாவிட்டாலும், இதை என்னிடமிருந்து பிடுங்கிக்கொள்ள முடியாது, நக்கீரன் நக்கீரன்தான், வரம்புகள் கடந்த விஷயங்களை எழுத்தில் பி டிக்க முயல்கையில், அவை நழுவுகின்றன, ஊடலாடுகின்ற ன. பாஷையே பரிபாஷையாக மாறுகின்றது.