பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盈4& லா ச ராமாமிருதம் "கேட்டாலும் கேட்டியே ஒரு கேள்வி:’ மறுபடியும் சிரிக்கிறாள். 'சரி விளையாடப்போ!' . முதுகில் என்னைச் செல்லமாத்தட்டி செல்லமாத்தள்ளி: விடறாள். நின்னு திரும்பிப் பார்த்தால், அம்மா திடீர்னு. அப்படி ஒரு அழகாயிருக்கா, எப்டின்னு சொல்லத் தெரியல்லே. மூஞ்சி ஒரே ரோஸ்-சிரிச்சு வேறே யிருக்கா. ‘என்ன பாப்பான்னு சொல்லல்லியே!” "அதைப்பத்தி இப்போ என்ன? அது அவள் இஷ்டம். இல்லை அவளுக்குக்கூடத் தெரியாது." 'யார் அந்த அவள்?’’ அம்மா பதில் சொல்லல்லே. உள்ளே போயிட்டா. வாசல் திண்ணையில் வெறிச்சோன்னு நிக்கறேன். கோவமா வரது 'பதில் சொல்றியா இல்லையா?" நிறுத்தி வெச்சு நம்மை ஆயிரம் கேள்வி கேப்பா அடிப்பா. ஆனால் நாம் ஒரு கேள்வி கேட்டால், ஹாம் பெரியவாளே இப்படித்தான் ராச்சசப்பாடு முடிஞ்சு எல்லாரும் வாசல் திண்னை யில் உக்காந்திருக்கோம், இன்னிக்குள்ளேயே, ஏன் என்னிக்குமே எனக்குப் பிடிச்ச நேரம் இதுதான். வேலை யெல்லாம் முடிஞ்சு எல்லாரும் ஒண்ணு சேர்ந்து பேசிண்டி ருக்கிற நேரம் இதுதான். அண்ணாகிட்டே ஒண்டிக்கிறேன். என் பக்கத்திலே அம்மா. சின்னவள் அவள் மடியிலே தலை, வெச்சு எப்பவோ தூங்கியாச்சு பெரியவன் உக்காந்துண்டு சாமியாடறான். அவனையிழுத்து அம்மா மடியில் தலையை வெச்சுக்கறா, தங்கச்சி தனியா துண்டு விரிச்சு சத்தே எட்டே படுத்திருக்கா. துரங்கிட்டாளா இல்லியா தெரியாது.