பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

寛52 லா, ச. ராமாமிருதம் பொறிச்சுட்டுப் போகனும், நான்தான் இந்த வயசிலேயே நோயாளியா எதுக்கும் உதவாமல் ஆயிட்டேன். நான் செய்ய முடியாததை என் பிள்ளை செய்யனும்-இது என் ஆசை. அவன் ஆசை எப்படியோ, போகப் போக எப்படி அமையுமோ, அவன் நசுத்ரம் அவனுக்கு எப்படி வழி காட்றதோ, யார் கண்டது? இப்போ என் ஆசையைத்தான் வெளிப்படுத்திக்கிறேன்!” "பணி விழுந்துட்டாப்போல இருக்கே அம்மா சிலிர்த்துக் கொண்டாள். 'உங்களுக்கு இனிமேல் வெளியில் இருந்தால் ஆகாது. நேரமும் ஆச்சு.” "என் நிலைமையை எனக்கு ஞாபகப்படுத்துகிறாய்.” அண்ணா பெருமூச்செறிந்து எழுந்திருக்கிறார். "'உங்கள் நன்மைக்குத்தான்- ' 'வாஸ்தவம். நான் இருப்பதே உன் பலத்தில்தானே. நீ இல்லாவிட்டால் நான் எப்பவோ-’’ அம்மா சட்டேன இடைமறித்தாள். "சரி, எனக்காகவும் சேர்த்துத்தான் சொல்றேன். வெச்சுக்கோங்களேன்!’’ பேச்சு புது பாஷையா மாறி எங்கேயோ போயிடுத்து இல்லே எங்கிருந்தோ வரதா? நக்ஷத்ரங்களிலிருந்தா? இதான் இவாகிட்ட ட்ரபிள். 寧 歌 物 இங்கே, ராத்திரியை அதற்குத் தனி தேவதையே இருப்ப தாகப் பேசலாம்.