பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்காக # 55 இஷ்டத்துக்கு முறித்துக்கொண்டு. இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் பூவரசு, மறுபக்கம் ஒதிய மரம். இலைகள் உதிர்ந்து, பூமியில் ஜமக்காளத்தைப் பரப்பியிருக்கின்றன. பெருக்கி மாளவில்லை. இலைகளில் சில சமயம் சலசலப்பு, எது வேனுமானாலும் இருக்காலம், ஜயமுள்ள வரை பயமில்லை, மேஸ்திரி இந்தத் தடவை சொல்லிவிட்டான். "மரங் களை அடியோடு வெட்டாட்டி, வீட்டு அஸ்திவாரம் "தக்க டாப் புக்கடா'த்தான். அடியிலே வேர். அப்பிடி முறுக்கிட்டு ஓடுது." மனதைத் திடப்படுத்திக் கொண்டேயிருக்கிறேன். இலைகள் உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன. உள்ளே கூடத்தில் உறங்குகிறார்கள் சுகவாசிகள்: 'நீங்கள் ஊருக்குத் திரும்பினதும் எனக்கு எழுத வேண்டும். என்ன எழுதுவீங்களோ, ஆனால் அது எனக்கு. எனக்கே, எனக்காகவே இருக்க வேண்டும்.” ஆம், நீ என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய்? ஒரு எழுத்தாளனிடமிருந்து கடிதம். பொத்தி வைத்துக்கொள்ள? அல்லது நாலுபேரிடம் பெருமையாய்க் காண்பிக்க? அல்லது ஒரு முதியோனின் புத்திமதி, உபதேசம், மந்த்ரம்? ஆனால் நீ கேட்டபோது, உன் புருவங்களின் நெரிசலில், நான் கண்ட வலி, கண்களில் ஏக்கம் அப்படியெல்லாம் நீ எதிர்பார்க்கவில்லை, எதிர்பார்க்கமாட்டாய். உள்ளங்காலில், படிப்படியாக சூடு பிடிக்கிறது. அடுத்து உடல் பூரா, வெய்யிலின் இதமான வெதவெதப்பு. இமைகளைச் சுகம் அழுத்துகிறது, தூக்கம் அன்று.

  • எனக்கே-’’