பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்காக 157 But... இந்த ஆனால் இருக்கிறதே, அது படுத்தும் பாடுதான் எல்லாமே உந்துகோலே அதுதான். என்னவோ நிகழப்போகிறது என்ன அது? என் உடல் தரம்புகளில் உணர்கிறேன். நிகழப்போவதில் என் பங்கிற்கு என்னைத் தயாரில் ஸ்ருதி கூட்டியாகிறது. உணர்கிறேன். உடலின் லேசான பரபரப்பு. conductor தன் மேடைமீது நிற்கிறார். பேட்டனைத் தட்டினதும் கப்சிப், ஊசி இடறினால் கேட்கும். கைகளை உயரத் தூக்கி வீசுகிறார். அந்த விரல் நுனிகளிலிருந்து கண்ணுக்கு அகப்படா மின்னல்கள் புறப்பட்டு வாத்யங். களைத் தாக்கினதும், அவை முழங்குகின்றன. Symphony இன் பின்னல்கள் தனித்தனி அததற்குரிய வாத்யத்தின் மீது படர்கின்றன. முதி இரவில், கட்டுமரத்தில், நடுக்கடலில் மீனவன், பிரம்மாண்டமான வலையைத் தவழும் அலைமீது தோகை பாக விசிறி எறிகிறான். புள்ளிக் கோலம் ஒன்றை அப்படியே பூமியிலிருந்து பெயர்த்து ஆகாசத்தில் எறிந்தாற்போல், மேகங்களில் ஒரு பட்சிக் கூட்டம். - பூமிமேல் விரித்த ஜமக்காளமாக உதிர்ந்த இலைகள் சலசல கிலுகிலு: அடுப்பங்கரையில் ஏதோ ஏனம் உருள்கிறது. எங்கோ துவைக்கும் கல்மேல் துணி அறையும் சத்தம். இச் ச்ே!! கீச்!!! மீனாட்சி: பாபு, நாம் எல்லோரும் விதிக்கப்பட்டவர்கள். விதிக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் உண்டோ? அறியேன்.