பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் 5

சொல்லும் பொருளும் நெஞ்சில் கண்ணாமூச்சி ஆடுகின்றன. சொல் பொருளைத் தேடுகிறது. பொருள் எட்டியும் எட்டாது சொல்லை நழுவுகிறது. இரண்டினுக்கும் இடையில் நான் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். சொல்லும் நானே. பொருளும் நானே.

நானே என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
இதற்கு எழுத்து எனக்கு வழித் துணை.
ஒருவனுக்கு அவன் பக்தி.
ஒருவனுக்கு அவன் ஞானம்.
ஒருவனுக்கு அவன் குரு.
அதுமாதிரி எழுத்து எனக்கு வழித்துணை.
ஒரு சமயம் அது என் விளக்கு
ஒரு சமயம் சம்மட்டி
ஒரு சமயம் கம்பு
ஒரு சமயம் கத்தி
ஒரு சமயம் கண்ணாடி

துரதிருஷ்டி, பூதக்கண்ணாடி.
முகம் பார்க்கும் கண்ணாடி
கண்ணுக்குக் கண்ணாடி
கைப் புண்ணுக்கும் கண்ணாடி

முள் எடுக்கும் முள் முள்
எடுக்கையில் , அல்லது
எடுத்தபின்

முள்ளோடு தானும் ஒடியும் முள்.

இந்த ஒடிப்பிடித்தலில், சொல்லும் பொருளும் நேரிடையாகச் சந்திக்காவிட்டாலும், சில சமயங்கள் தலைகால் தெரியாமல் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்கின்றன. அல்லது உராய்கின்றன, அல்லது ஒன்றன் காற்று ஒன்றன் மேல் படுகிறது. பறவையின் சிறகு முகத்தில் அடித்தாற் போன்ற அந்த அதிர்ச்சியில்கூட, என் காலடியில் பூமி