பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 லா ச. ராமாமிருதம் தடுங்குகிறது. அதிலேயே நான் அனுமார்மாதிரி வளர் கிறேன். அந்த சமயத்தில், ஏழு கடலையும் உளுந்து உருளும் அன்விற்கு ஆசமண தீர்த்தமாய் உள்ளங்கையில் ஏந்திய குறு. முனியின் செயலாட்சி புரிகிறது. புராணம், பழங்கதைகள், இவைகள் நிஜமா, பொய்யா நம்பத்தகுந்தவையா இல்லையா இதெல்லாம் வேறு. சர்ச்சை, நான் சர்ச்சைக்கும் சண்டைக்கும் ஆளல்ல. நான் புண்டிதன் அல்ல. நான் கண்டதை எல்லோரும் அவரவர் பிறப்புரிமையாய்க் கண்டதை கண்டும் சொல் ை இயலாததை, ஏதோ எனக்குத் தெரிந்தவரை, முடிந்தவரை சொல்ல முயல்கிறேன். ஒன்று நிச்சயமாய்க் காண்கிறேன். புராணம், ப ழ ங் க ைத க ள் இவையெல்லாம் ஒரு பரிபாஷை, தெய்வம்கூட பரிபாஷைதான். அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறாப் போல், திண்ணையில் நா லுபேருடன் நான் பேசிக்கொண் டிருக்கையில், என் மகனோ மனைவியோ வாசலுக்கு வந்து, தன் மூக்கைச் சொரிந்துகொண்டால், ""ச:ைபல் ஆறுகிறது. இவர்களை அனுப்பித்துவிட்டு சாப்பிட வாருங் கள்,' என்கிற அர்த்தம் மாதிரி, காதைத் திருகிக்கொண்டால், "கடன்காரன் போய். விட்டான், கதவு மூலையிலிருந்து வெளியே வரலாம்" என்கிற அர்த்தம் மாதிரி. பொருள், ஓசை, சொல், நகம், பொருள். பொருளில் ஆரம்பித்து பொருளில் முடியும் பொருள் . தான். தேடுகிறேன்.