பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜனனியிலிருந்து சிந்தா நதிவரை 171 அந்தக் கதையை எழுதினபோது எனக்கு வயது 32. அதை எழுதியதன் அடிப்படை நோக்கம் எழுத்து மூலமேனும் அவளைப் பழிவாங்க வேண்டும். அவளை மனித ஜன்மம் எடுக்கச் செய்து அதில் அவளை உழலவைத்து அவன் என்னைப் படுத்துவதுபோல், அவளும் படவேண்டும் என் வாழ்க்கையில் அப்போது, பலவிதங்களிலும் மிக்கச் சோதனையான கட்டம், வேதனை பொறுக்க முடியாமல் , ஓரிரவு உயிரை மாய்த்துக்கோள்வதென்று சமுத்திரத்துக்குப் போய்விட்டேன் என்றால் பாருங்களேன். கரையோரம் ஒரு ஒடத்தின்மேல் சாய்ந்து நின்றபடி, அலைகளுள் புக ஏற்ற சமயத்துக்குக் காத்துக்கொண் டிருக்கையில். யுகாந்தரமாய்ச் சிகரங்களில் வெண்னுரையைக் கக்கிக் கொண்டு திரண்டுவந்து வியர்த்தமான கோபத்தில், கரையை அறைந்து விட்டு ஓயாத மறுமுயற்சியில் மீளும் அலைகளில், துண் உணர்வின் உட்செவியில் ஒரு சேதி கேட்டது. "'இதோ நீ பார்த்துக் கொண்டிருக்கிறாயே, உனக்கு முன்னாவிருந்து, உன் மூதாதையர் முன் அவர்கள் மூதாதை பர்க்குமுன், காலம் கடந்த காலத்திலிருந்து ஓயாத இந்தக் கடலியக்கம், இதுவே சிருஷ்டியின் ஒரு சாயல்தான். இதில் நீ உத்தேசித்திருக்கும் உன் சாவு எம்மாத்திரம், ஒரு திவலை காணுமா? இந்த அலைகளுக்கு இன்னும் அலுக்கவில்லை. ஆனால் அதற்குள் உன் வாழ்க்கை உனக்கு அலுத்து விட்டதா? இாத்திருப்பதைத் தவிர என்ன வேலை? பிறவியின் நோக்கமே காத்திருப்பதுதானே! ஆகையால் காத்திரு.” எண்ணத்திலிருந்து மீட்சி எண்ணத்தினால்தான். சமூத்திரத்திலிருந்து மீண்டேன். ஆனால் சோதனைகள் குறையவில்லை.