பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜனனியிலிருந்து சிந்தா நதி வரை ፲ 78 கர்ப்பக்ருஹத்தின் இருளில் கர்ப்பூர ஹாரத்தி முகத்தை ஏற்றுகையில் திடீரென அவள் விழி மலர்ச்சியில், கன்னங் களை குழித்த புன்னகையின் மர்மத்தில், மரத்திலிருந்து கழன்று உதிரும் இலையில் வெளிப்படும் ஸ்ஹிக்கொனா துக்கத்தில், வாசலில் கொட்டிய ஆரத்தியின் வாரியிரைத்த ரத்தச் சிவப்பில், அவள் மூக்குத்தியின் ஜ்வலிப்பை நினைவு மூட்டும் கோடை மின்னலின் கொடியில், அவள்தான் அப்படித் தோன்றி கண்ணாமூச்சி காட்டித் திரிகின்றாள். "என்னைப் பார்! என் அழகைப் பார்! காத்திருக்கச் சொன்ன மர்மமும் பொருளும் இதுதானோ என்றுகூடத் தோன்றுகிறது. என் நெஞ்சத்தின்மேல் அவள் திமி திமி'யில், அவள் உள்ளங்கால்களில் பற்றிக்கொண்ட என் நெஞ்சத்தின் ரத்தக் கசிவுதான் அவள் இட்டிருக்கும் மருதாணி. விருது விழாவில் நான் நிகழ்த்திய உரையில் சிந்தா நதி பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறேன். சிந்தாநதி: நினைவுப்ரவாஹம் மக்கள், சம்பவங்கள், புழுக்கங்கள், ஏக்கங்கள், உருவங்கள் உருவகங்கள், ஸ்தூலங்கள், அருபங்கள், நினைவுக்குப் பிடிவழுக்கி, அதீத அனுமானங்கள், சொல்லப்படும் சம்பவங்கள், மேம்பாடுக்குக் சொல்பமாய், நலுங்கலாய், ஏன் கட்டடங்கள் கூட இலாது . படினும் அவைகளின் மர்மக் கோடி காட்டலில் அடித்வனிகளில்