பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

778 லா. ச. ராமாமிருதம் ஆனால் உண்மையில். இந்த சமயம் என் பெற்றோர் களைச் சேர்ந்தது என்று பணிவுடன் உங்களிடம் சமர்ப்பிக் கிறேன். எப்பவுமே அது அவர்களுடையதுதான். ஏனெனில் பெற்றவர்களின் ஆயிரம் ஆசைகளின் ஆவாஹன மாகக் குழந்தை விளங்குகிறது. அந்த முறையில் மனிதனின் லகதியமாக நிறைவேறாத அவன் லகசியங்களின் தொடர்பாக மகன் விளங்குகிறான். யாவற்றிற்கும் மேலாக விருதுக்கு சிந்தா நதியைத் தேர்ந்தெடுத்தமைக்கு அகாதெமிக்கு என் பாராட்டுக்கள். மக்களிடையே விருது வாங்கியவர் உள்பட பரவலாக ஒரு அபிப்பிராயம் நிலவி வருகிறது. மிகையான தாமதத்தின் காரணமாக எழுத்தாளன் தன் சிருஷ்டி சக்தி அதன் சிகரத்தை எட்டி இறங்கிவிட்ட பின்னர் எழுதிய புத்தகத் துக்கே விருது வழங்கப்படுகிறது என்று, ஆனால் 'சிந்தா நதி விஷயத்தில் அப்படி நேரவில்லை. இந்த நூல் என் எழுத்து அடைந்திருக்கும் மெருகில் உள்ளடக்கம், உத்தி, நடை அம்சங்களில் என முதிர்ச்சிப் பக்குவத்தின் சிறப்பில் என்னைக் காட்டுகிறது. நான் மட்டும் இப்படிச் சொல்ல வில்லை. என் விசுவாசிகளின் கருத்தையும் பிரதிபலிக் கிறேன். காத்திருந்தது வீணாகவில்லை. விருதின் சேதி வெளியானபோது சிந்தாநதி, சுய வரலாற்றுக் கட்டுரைத் தொகுதி என்று விவரிக்கப்பட்டது. ஆனால் அப்படி அன்று. சிந்தா நதி: நினைவுப்ரவாகம், மக்கள், சம்பவங்கள், புழுக்கங்கள், ஏக்கங்கள், உருவங்கள், உருவகங்கள், ஸ்தூலங் கள். அருபங்கள் நினைப்புக்கு வழுக்கிய அதீத அனுமானங் கள், சொல்லப்படும் சம்பவங்கள், மேம்பாட்டுக்குச் சொல்ப மாய், நலுங்கலாய்-ஏன் கட்டடங்கூட இலாது படினும் அவைகளின் அதிசூrமமான கோடி காட்டலில், அடித்வனிகளில்,