பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 லா. ச. ராமாமிருதம் உலகத்தின் கோளத்தையே என் சுண்டு விரல் நுனியில், எனக்கு சொந்தமாய் ஏந்த ஆசைப்படுகிறேன். இதைச் சொல்லிக்கொள்வதில் எனக்கு வெட்கமில்லை, பயமில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற அக்கறையில்லை. - நான் தேடும் அழிவிலாத் தன்மையை அடைவது எப்படி? படித்தோ, கேட்டோ நான் சொன்ன சொல்லில், அவன் கண்ட பொருளுக்காக ஒருவன் வயிறு குளிர்ந்து, விழியி லிருந்து வழியும் கண்ணிர் குளிர்ந்து, மனமார என்னை வாழ்த்துகையில், நான் எனக்குத் தெரியாமலே, அவன் மலர்ச்சியில், அவன் ரத்தத்தின் உள்சத்துடன் கலந்து, அவன் சந்ததிமூலம் விருத்தியாகிறேன். என் சொல்லின் வித்துக்கள் அங்கங்கே சிதறி பொருளாய் விருத்தியாகையில் நான் நித்யத்துவத்தை அடைகிறேன். ஸ்வயாகாரத்தின் சதாகார ஸர்வாதிகாரத்தை அடை கிறேன். கோடுகள் அழிந்தபின் எல்லாம் நான்தான். நானேதான் என்னுடைய விளைவு என்னுடைய துணை என்னுடைய சத்துரு என்னுடைய மறைவு என்னுடைய குழப்பம் என்னுடைய தெளிவு என்னுடைய விடிவு ஆனால் நிச்சயமாய் எனக்கு அழிவு இல்லை. தானே என்னுடைய அழிவற்ற கனா.