பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் g நான் காணும் கனவில் இது நடக்கும் இது நடக்சிசத்தி என்பதில்லை சமுத்திரங்களில் ஜலம் உள்ளவரை சூரியன் கிழக்கில் உதிக்கும்வரை எனும் பிரமாணங்கள் செல்லாது. என் உலகில் சூரியன் மேற்கில் உதிக்கும், கடல் வற்றுசி: ஊசிக் காதில் ஒட்டகம் புகுந்து வெளிப்படும். அதைப்பற்றி ஆச்சரியப்படுதல்கூட தவறு. ஏனெனில் அது நியாயபூர்வமாய், சொல்லாட்சியினின்று விளைந்த, விளையும், விளையப்போகும் செயலாட்சி. இன்றையக் கனவு நாளைய நனவு, ஏனெனில் இன்றைய நனவு நேற்றைய கனவு. கனவுப்படியே நனவும் நேரும் என நான் சொல்ல வரவில்லை. கிணறுவெட்ட பூதம் புறப்படும். பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடியும். அதனாலென்ன? அதற்குப் பின்? குரங்குதான் சமுத்திரம் தாண்டிற்று, குரங்குதான் கண்டது. கண்டதோடு இல்லை. கண்டேன்’ என்றது. அதுதான் நம் மாந்தாதா. பூதந்தான் புதையலைக் காக்கிறது. எப்படியும் நனவின் ஆதாரம் , அருவம், கனவு. பத்து வருஷங்களுக்கு முன்னால் நான் ஒரு கனாக் கண்டேன். இன்றும் நினைவைவிட்டு மறையவில்லை. வானத்தில் நிலவுக்கு முன் மேகங்கள் சரசரவென விரைந்துகொண்டிருந்தன. ஆனால் சந்திரன் தெரிய வில்லை. தேங்காயைத் துருவி மலையாய்க் குவித்திருந்தது. என் கண்ணுக்கெட்டிய வரையில் மேகங்களில் கற்கண்டு கட்டிகள்போல் நrத்திரங்கள் வாரியிறைந்திருந்தன.