பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. அதுதான் கிராமம் கெல், நெல், நெல், எங்கு பார்த்தாலும் நெல். வாசற்படி ஏறியதும், பெரிய திண்ணையில் நெல், உடனே ரேழியில் நெல், அடுத்த தாழ்வாரம், பட்டவாசல்ஒரே சமயத்தில் ஐம்பதுபேர் சாப்பிடலாம்-பூரா நெல், கூடத்தில் வாசல் வைத்த சமையலறையை குறுக்கே தாண்டினதும் வென்னீர் கொட்டகையில்-அடுப்புச் சுவ ரோரம்வரை நெல், கனுக்கால் ஆழத்துக்கு ஒரே நெற்கடல். மிதிக்காமல் வழியில்லை. வருவோரும் போவோரும் மிதியலி லேயே கணிசமாக நெல், பதரும் மணியுமாகப் பிரிந்திருக்கும். வென்னீர்க் கொட்டகைக்கு ஒட்டினாற் போன்ற கிணற்றடியும் அது தாண்டி மாட்டுக் கொட்டகையும் சதா சலுப்பும் மாடுகளும் இல்லாமலிருந்தால் நெல் கடல் அங்கும் வியாபித்திருக்கும். "என்ன பண்ணுவது மாமா? முன் துறலைப்பார்த்தே அறுவடை செஞ்சுட்டேன். அப்படியும் மழையிலே கொஞ்சம் வீணாப்போச்சு , ' "எங்கே நான் படுக்க, நடமாட?’’ திகைப்புற்றேன், திகிலுற்றேன்.