பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翠路 லா. ச. ராமாமிருதம் 'இதோ விசுப்பலகையில் படுங்கள், உட்காருங்கள், படியுங்கள், எழுதுங்கள், புழங்குங்கள். நான் திண்ணை பெஞ்சில் ராத்ரி படுத்துக்கறேன். விஜயா சமையலறையில் முடங்குவாள். பசங்களை வேப்பிலையாத்துக்கு விரட்டிடு வேன். இன்னி ஒரு நாளைக்குத்தான். நாளைக்கு மூட்டை போட்டு மெஷினுக்குப் போயிடும்.’’ 'காலால் மிதிக்கவே கூசறதே சந்தானம்!" "மாமா, இதைக் கேளுங்கள்: நீங்கள் எழுத்தாளர். சிந்தனை பண்ணுங்கள். இது அறுவடைக்கு முன்னால் கதிராக ஆடுகையில், வயலில் என்னென்ன அசூயை நடக்கம் துன்னு ஒரு நிமிஷம் எண்ணிப் பார்த்தால், சாதமே வேண்டி யிருக்காது. சாப்பிடாமல் நம்மால் இருக்க முடியுமோ? இதையே தாம்பாளத்தில் பரப்பி, குத்துவிளக்கை அதன்மேல் வெச்சு ஏத்திட்டா, அம்பாள் ப்ரஸன்ன மாயிட்டா. அrதையாகத் தலைமேல் போடுங்கோ. தீர்க்காயுஷ்மான் பவ: அன்னமாக இலையில் வட்டித்துப் பாருங்கோ. 'அன்னம்சப்ரம்மா: எல்லாம் இடமும் ஏவலும் பொருந்தித்தான் மஹிமை. முதலில் நினைக்க நேரம் இருந்தால்தானே வித்தியாசங்களுக்கு வழி! மாடு கறக்க நேரமாச்சு போறேன். நீங்கள் விசுப்பலகையில் உட்காருங்கோ. விஜயா மாமாவுக்கு ஜோரா காப்பி போட்டுக் கொடு. போய்விட்டான். மாட்டுக்கொட்டகையில் பசுக்கள் இரண்டு, எருமைகள் இரண்டு, கன்றுகள் நாலு கொட்டகை தாண்டிப் போனதும் வைக்கோற் போருக்குப் பரந்தவெளி. அப்பால் தோட்டம் தென்னை, இலை, செடி, கொடி, புதர், காடு அப்புறம் வாசல் தெருக்கு parallel ஆக புழைக்கடை சந்து, இந்த விஸ்தீரணத்துக்குப் பட்டணத்தில் ஒரு 3-sta ஹோட்ட லேனும் கட்டிவிடுவான்கள்.