பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுதான் கிராமம் 互5 ஊஹாம். தப்பவே முடியாது. வெடுக்கென்று ஏதேனும் சொல்லி, மனதைப் புண்படுத்தவா, பதினைந்து வருடங்கள் கழித்து வந்திருக்கேன்? 'மாமா சாப்பிட இங்கேயே வந்துடுங்கோ." 'இல்லை அங்கே ஒத்துண்டுட்டேன். இங்கே என்ன சமையல்?" பறங்கிக்காய்க் கூட்டு பறங்கிக்காய் வற்றல் குழம்பு, பரவாயில்லை. அங்கே கொடுத்து அனுப்பறேன்." "அங்கேயும்- இல்லை, சொல்ல மனமில்லை. வேப்பிலையின் பெண்களில் இருவர் பள்ளி ஆசிரியை வேலை பார்க்கிறார்கள் . ஆனால் ஒரு வாரமாகப் பள்ளி யில்லை. ஆசிரியர்கள் போராட்டம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. கைதானவர்களைக் கொள்ளமுடியாமல், திருச்சி ஜெயில் வழி கறது. ஆசிரியர்களுக்கும் களிதான் போடுகிறார்களாம். சரியாகக்கூட வேகவில்லை. வயிற்று வலி, போக்கில் அவஸ்தைப்படுகிறார்களாம். பார்த்து வந்தவர் சொல்கிறார்கள். வேப்பிலையின் பெண்களும் சந்தானத்தின் குழந்தை களும் மாவட்டச் சேதி கேட்க ட்ரான்ஸிஸ்டரைச் சுற்றி நிற்கிறார்கள். போராட்டத்தின் நிலைமை, சமாதானப் பேச்சு வருகிறதா அறிய, பையன்களுக்குக்கூட வீட்டில் இப்படி இருப்பது நிலை கொள்ளவில்லை. - மணிகண்டனும், சேகரும், குளிப்பாட்ட மாடுகளை வாய்க்காலுக்கு ஒட்டிச் செல்கின்றனர். அவரவருக்கு ஒரொரு வேலை. எல்லோருக்கும் வேலை. அப்படிச் செய்யாவிட்டால் கிராமத்தில் ஒன்றும் நடக்காது. மெதுவாக, நேரத்தைப் பற்றி அக்கறையில்லை. ஆனால் ஓயாத வேலை. நேரம் நகர்கிறது. இருளை நோக்கி நகர்கிறது.மாரி.