பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 லா ச. ராமாமிருதம் ஆனால் வாஹனத்தின்மேல் உறை விழுந்தாற்போல் திடீ. ரென இருட்டு எப்படி, இப்படி, புடைசூழ்ந்துகொண்டது? மாயமாயிருக்கிறது. சற்று நேரத்துக்கு முன்தான் மாலை வெய்யில் சீவனற்று கூடத்து சுவர்மேல் ஏறிக்கொண்டிருந் தாற்போல் இருந்தது. விஜயா லாந்தர்களை ஏற்றுகிறாள். என்ன ஏற்றி என்ன? கிராமத்தில் என் பையல் பருவத்தின் இதே நிலை மையை வலுக்கட்டாயமாக நினைவுபடுத்திக் கொள்கிறேன். அதனால்? இன்று இருள் பழக்கமாகிவிடுமா? இருளினால் மட்டுமே பழைமையைப் பெற்றுவிட முடியுமா? மாமா சாப்பிட வாங்கோ. ” சூரிய அஸ்தமனச் சுருக்குடன் இங்கே சாப்பிட உட் கார்ந்துவிடுகிறார்கள். மறுநாள் வெள்ளியோடு எழுந்திருக்க வேண்டுமென்பதாலோ: மழைக்காலம் அஸ்தமனமும் சுருக்க நேர்ந்துவிடுகிறதென்பதாலோ: எரி பொருள் காக்கவேண்டு மென்பதாலோ அல்லது இதற்குப் பிறகு வேறு வேலை யில்லை என்பதாலோ: எப்படியிருந்தால் என்ன? திண்ணையில்-நெல்லை மூட்டை போட்டாகிவிட்டது) ஏழரை மணிக்கே ஸ்ந்தானம் எனக்குப் படுக்கை விரித்தாயிற்று. நானும் உடம்பை நீட்டி பாச்சு, விளக்குகளில் திரியை உள்ளுக்கு இழுத்தாச்சு. பணிக்குப் பாதுகாப்பாக, திண்ணையில் படுதாக்களை இறக்கியாச்சு, தலைமாட்டில் விகப்பலகையில் தடதடவேன சத்தம் கேட்டு, திடுக்கிட்டு எழுந்து உட்காருகிறேன். லந்தானம் சிரிக்கிறான். 'ஒண்னுமில்லை மாமா, நாய். வளர்க்கிறாயா?" 'சரியாப் போச்சு. அது ஒண்ணுதான் பாக்கி, தெரு நாய், நிறை கர்ப்பம். இன்னும் பதினஞ்சு நாளில் போட்டுடும். இருப்புக்கொள்ளல்லே. புரன்றது .'