பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையின் தரிசனம் 23 விழும் இதழ்களுக்குக் காத்திருந்து, அவைகன்ளக் கண்டெடுத்து உண்டவன் பாக்கியவான். உள்ளமெலாம், உள்ளே, உடல் பூரா மனம் கமகம்க் கிறதே! பூமியின் கவிதையில் ஒரு வரியாக விளங்கக்கூட நான் ஆசைப்படவில்லை. - அடேயப்பா என்ன பேராசை என்ன அசட்டுத் தைரியம்: . ஒரு வார்த்தையாக? ஒரு சொல்? ஊ-ஊம். இதோ நடு வந்துபோம் ஆனைக்காவின் அகிலாண்டே சுவரி சன்னதியில். அத்துணை துணிச்சலுக்கு எங்கு போவேன்? ஒரு அக்ஷரத்தின்மேல் புள்ளி ஒலியாக, அநாமியாக இடம் தந்தாளெனில். அதுவே பிறவி கண்ட பயன் ஆகிவிடாதா! ක්‍ෂීද 線 德 அரைக் கண் மயக்கத்தினுள்டே அம்மாவின் குரல்இங்கு எப்படிக் கேட்கிறது? - ' "ராமரத்னம், சாப்பிட வாயேன்!-’’ மும் இருக்காளே! திடுக்கென விழிப்பு. அட ராமரத்ன வேப்பிலை, அவள் பெண்ணைச் சாப்பிட அழைக் கிறாள். இந்த நிமிடம் வரை, இந்த வெளிச்சத்துக்கு எப்படிக் கண்மூடியாக இருந்திருக்கிறேன்? வேப்பிலையின் பெண், அந்த தேகவாகு, அந்த வண்டு விழி, அந்தக் கன்னக் கதுப்பு-அப்படியே ராமரத்னம் அச்சு. உள்ளே போகிறேன்.