பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 லா, ச. ராமாமிருதம் “வாங்கோ மாமா வாங்கோ. எழுப்பலாமா வேண்டா மான்னு நானே தவிச்சுண்டிருந்தேன். காப்பிக்குப் பாலை அடுப்பிலே வெச்சிருக்கேன்.” என் குழப்பத்தை அவளிடம் தெரிவிக்கிறேன். மனத்தின் குழளறலை யாரிடமேனும் சொல்லிக்கொள்ளனும்போல் இருக்கிறது: 'ஏன் இருக்காது? வம்சவழி எங்கே டோகும்? உங்கள் அம்மாவும் என் பாட்டியும் ஒரே வயிற்று உடன் பிறப்புகள். ஆகச்சே என் குரலில் உங்கள் அம்மாவின் ஒற்றுமையும், ராஜியும், உங்கள் தங்கையும் ஒரே ஜாடையாயிருப்பதிலும் என்ன ஆச்சர்யம்: மாமா, நீங்கள் வாசலில் போற மாமாவை மாமான்னு அழைக்கற மாமாயில்லே. நிஜமாவே உறவு மாமா எனக்கு ஒண்ணுவிட்ட மாமா ஆவாவா எங்கெங்கோ பிரிஞ்சுபோய் உறவு பிரிஞ்சு போசாட்டாலும் மறைஞ்கபோயிடறது." 孪 朱 அவள் அணிந்த மாலையினின்று உதிரும் இதழ்கள் விழும் இடத்தில் நேரும் நெஞ்சுள் எதிரொலியே கவிதை. ஆகவே, எந்தக் கவிதையும் யாருடைய சொந்தக் கவிதை அல்ல. இதென்ன பல்லவி? இன் று கார்த்திகை. ஒரே ஜமக்கான விரிப்புப்போல், தெருவில் கோலங்கள். வீட்டுக்கு வீடு கோலத்தாமரை நடுவில் குத்துவிளக்கை நிறுத்தி, ஐந்து முகங்களிலும் திரியேற்றி, தாமரை இதழ் களின் நடு நரம்புகளில் வரிசையாக வைத்த அகல் விளக்கு களை வீட்டு மகிஷியும், இளவரசிகளும் ஏற்றுகிறார்கள். பட்டுப் புடவையைக் கொசுவம் வைத்துக் கட்டிக்கொண்டு -தெருவே திருமணக் கோலம்; ஒரே தேஜோமயம்.