பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. எங்கள் வீடு ஆ! எங்கள் வீடு பற்றிய விஷயங்கள் வற்றாதகனைத் எங்கன் வீடு என் கையில் எங்கள் லால்குடி வீட்டைத்தான் குறிக்கிறேன். எங்கள் லால்குடி வீடுகள்.ட இப்போ எங்க குடையதல்ல. சிவராஜ குருக்களுக்கு முப்பது வருடங் களுக்கு முன்னாலேயே சொந்தமாயச்சு . சிவராஜ குருக்களும் காலமாகிவிட்டார். அவருடைய பிள்ளைகள் ஒற்றுமையாக ஒரு குடித்தனமாக அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நல்ல பிள்ளைகள் இன்றுபோல் என்றும் இருக்கவேனும், 'இது பெருந்திரு வீடு. இன்றைக்கு எங்கள் கைக்கு மாறியிருக்கிறது. என்றைக்கும் இது உங்கள் வீடுதான்!” சிவராஜ குருக்களைத் தவிர, வேறு யாருக்கும் இப்படி மன மாரச் சொல்லத் தோன்றுமோ? குருக்கள் கைக்கு மாறின. பிறகு, அவர் வாசலுக்கு முகம் துக்கி விட்டுவிட்டார். ஆனால் மற்றபடி வீடு பேரும்பாலும் இன்னும் பழைய ‘அம்முவாமாகத் தான் இருக்கிறது. எங்கள் வீட்டுப் பெயர் அமிர்தமய்யர் வீடு என் கொள்ளுப்பாட்டனார் பெயர். பேச்சுவழக்கில், அம்முவா மாகத்'தான் திரிந்தது.