பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் வீடு $1 ஆனால் அம்முவாத்து ஃபேமஸ் பிரசவ கேஸ் குடும்பத்துள் தேர்ந்ததல்ல. கறிவேப்பிலைகாரி கேஸ். என் கொள்ளுப்பாட்டனார் காலம். அப்போ எல்லாம் பிடியரிசிக்குக் கறிவேப்பிலை. காசுக்கு அல்ல. கறிவேப்பிலைக் கூடைக்காரி முன் பின் பார்த்தவள் அல்ல. வெளியூரிலிருந்து வந்த புதுமுகம், கொள்ளுப்பாட்டி கறிவேப்பிலையை வாங்கிக்கொண்டு அடுக்களைக்குள் அடைத்திருக்கமாட்டாள் வாசலில், "அப்பா, அம்மா” என்று தீவிர முனகல் சத்தம் செவியில் வந்து மோதவும், ஒடி வந்து பார்த்தால் கறிவேப்பிலைக் கூடைக்காரி திண்ணைத் துணில் சாய்ந்தபடி, இடுப்பைப் பிடித்துக்கொண்டு தவிக்கிறாள். இடுப்புக்குமேல் உடம்பு செக்காய்த் திரிகிறது. நெற்றியில் வேர்வை கொட்டுகிறது. கண் செருகுகிறது. பாட்டிக்கு விஷயம் புரிந்துவிட்டது. 'அடி பாவி' அவளைத் தோளில் தாங்கியபடி பாதி தாங்கி, பாதி நடத்தி, ஒழுங்கையுள்ளே போய்ச் சேர்த்துவிட்டாள். அதன் இருள் இருவரையும் கவிந்து அணைத்துக்கொண்ட சில நிமிடங்கள், ஒரு புதுக்குரல் இருளை வெட்டியது. இதற்குள் தகவல் தீப் பரவி வாசல் எதிரே தெரு. கொல் அம்முவாத்தில் கறி வேப்பிலைக்காரி பிரசவம். இதுதான் தெருவெல்லாம் பேச்சு. அன்று மாலை அவள் புருஷன் தேடிக்கொண்டு வந்துவிட் டான். இருந்தும் அவளை ஒரு வாரம் வைத்துக்கொண்டு பத்தியம் போட்டு கையில் ஒரு கால்படி அரிசியும், ஒரு பழம் புடவையும் கொடுத்து கொள்ளுப்பாட்டி அனுப்பி வைத்தாளாம். பிள்ளைப்பேறு-இவ்வளவு பெரிய குடும்பத்தில் ஒழுங்கை உள்ளுக்கு அதிகம் ஒழிவு இருக்காது-பிள்ளைப் பறு மாறி மாறி இல்லாத சமயத்தில்-ஒழுங்கை உள்ளில்