பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் வீடு 5 همامي 'டேய் ஜகதீசா. இந்தப் புனர்வசு நகrத்ரங்களே மக்குத்தானே!" 'ஜனகன் கலப்பைக்குப் பெட்டியோடு குழந்தை தட்டுப் பட்டது சரி. அப்புறமாவது ஜனகன் புலன் விசாரிச்சானா? சீதை என்ன ஜாதின்னு தெளிவாச்சோ? அவள் பிராம் மணத்தியா, எஸ். சி. யா?-- 'சிதம்பரம், அதெல்லாம் எதுக்கு வளர்ப்பில் படியற படிதான் ஜாதி குணம், தரம் எல்லாம் "அப்போ பிறவிக்குணம்னு ஒண்னு கிடையாதா?’’ "குலத்தளவே யாகுமாம் குணம்-’’ 'வளர்ப்பு குணம் வெல்லுமா? பிறவி வாசனைதான் துரக்குமா?’’ இது இன்னொரு விவாதம். பொதுவாக ஆரம்பித்து அவரவர் தனி வாழ்க்கைமேல் தாக்குதலாகவும் மாறிவிடும். " உன் லக்ஷணம் தெரியாதா, வெளியில் சொன்னால் வெட்கக் கேடு, நாளைக்கு சாப்பாடு முடிஞ்சதும் பிரிஞ்சு போயிடப் போறோம், வந்த இடத்தில் வம்பு ஏன்னு இருக்கேன்.'" இந்தச் சர்ச்சைகள் வெறும் பொழுதுபோக்கு வம்புகள் அல்ல. வெவ்வேறு நூல்களிலிருந்து (நன்னூல் காண்டிகை உள்பட) மேற்கோள்களுடன் அவனவன் தன் தனித்தனி நியாயங்களைப் பேசுகையில், தர்க்க ரீதியில் தன்தன் தன்னிழப்பில் இந்தக் கூடமே சித்ர கூடம், பஞ்சவடி, ராவணன் சபையாக மாறிவிடும். சுவாரஸ்யத்தில் வாசலி லிருந்தே ஒரு கூட்டம் கூடியிருக்கும். எங்களுக்கு ஒன்றும் புரியாது. ஆனால் வாயைப் பிளந்தபடி கேட்டுக்கொண் டிருப்போம். ஈக்கள் தாராளமாக உள்ளே புகுந்து புறப் பட்டுக் கொண்டிருக்கும்.