பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் வீடு 39 எங்கள் அம்மன் அப்படியல்ல. சாந்த ஸ்வரூபி. அவளே ப்ரவிருத்த பூரீமதி. தர்க்கம், மீமாம்ஸம், வேதம், ஸ்மிருதி, வியாகர்ணம், தத்துவவிசாரம், பண்டிதர்கள் நிஜ ஆர்வத் துடன் வேண்டும் துணுக்கங்களுக்குப் பதில்கள், அவளைப் பரீட்சிக்கும் முறையில் எழுப்பும் குதர்க்கங்களுக்கு சரியான வாயடைப்பு-அது பாட்டுக்கு பெந்துப்பாட்டி வாயிலிருந்து ஸ்ரளமாய் வந்த வண்ணமிருந்தன. லால்குடி, பக்கத்து ஊர்கள். அங்கிருந்து சேதி தொற்றிக் கொண்டதும், இன்னும் தூர இடங்களிலிருந்து ஜனத் திரள் எங்கள் வீட்டுக்குப் புரண்டது. பாட்டி கை விபூதிக்குத் தீராத வியாதிகள் தீர்ந்தன. பாட்டி கையில் சக்கரம் தோன்றிற்று. அந்த மண்டலம் முழுதும் பாட்டிக்கு ஆகாரம் செல்ல வில்லை. ஆனால் தென்பு சொல்லுபடி போகாது. சாதாரண மாக அவளுக்கு வேளைக்கு மூணு ஆழாக்கு வெண்கலப் பானை முழுக்க வேணும். நிஜத்தோடு நாளடைவில் சேர்ந்திருக்கக்கூடிய கைச் சரக்கு, புரளி, சிக்கு, பசையைப் பிரிக்கவோ. ருசுப் படுத்தவோ நான் இயலாதவன். எல்லாம் சொல்லக் கேள்வி தான். யாரும் எழுதி வைத்துவிட்டுப் போகவில்லை. எழுத்து மட்டும் கலப்படத்திலிருந்து விடுதலையா? ஆனால் ஒன்று தெளிவு. இந்த வீட்டில் பெந்துப்பாட்டி காரணமாக அல்லது சாக்கில் ஏதோ அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. அன்று வெள்ளிக்கிழமை. மாலை கூடத்தில் சுவரோர மாய்ப் பலகையில் கோலமிட்டு, குத்துவிளக்கை வழக்கம் போல் ஏற்றி வைத்துவிட்டு, யார் யார் என்ன வேலையில் இருந்தாரோ தெரியாது யாரும் கூடத்தில் இல்லை. பெந்துப்பாட்டி சமையலறையில் இருந்திருப்பாள்.