பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

இதென்ன “கொலம்பஸ்”ஸா உங்கள் உதட்டோரத்தில் ஏளனம் துளிப்பது காண்கிறேனோ?

கூடவே இன்னொரு தெளிவு. மூளையுன் ரத்தத்தின் திடீர் அலைபாயல் என நான் எண்ணியது (ஒரு வேளை) அதுமட்டுமல்ல. கூடவே நாளடைவில், சிறுகச் சிறுகச் சேர்ந்து, இன்னமும் சேர்ந்துகொண்டே, உரிய வேளையில் வெளிப்படக் காத்திருக்கும் க“”தைகள், நாவல்கள் எண்ணங்கள், கருத்துக்கள் (ideas), சொல் சித்திரங்கள், சொற் சோதனைகள் ஏற்கெனவே நான் எழுத உத்தேசித்திருப்பவை, இனியும் எனக்குத் தோன்ற இருப்பவை, கருவூலங்கள், முழு உருவங்கள் — அத்தனையின் ஆடிப்பெருக்கு,

ஆனால் இனி எனக்கு நேரமில்லை.

இது “கொலம்பஸ்” இல்லைதான். ஆனாலும், தெரிந்த உண்மையே, அதன் முழு உரத்தில் கன்னத்தில் ‘பளீர்’ அறையும் வேளையும் உண்டு. எப்போது அறைந்தாலும் அறை எதிர்பாராததுதான். வலிக்கத்தான் செய்கிறது.

கூடவே சொல்கிறேன். எழுதுவதற்கு விஷயத்துக்கு என்றுமே நான் பஞ்சப்பட்டதில்லை. ‘எழுத்தடைப்பு-Writers Block’ என்று சொல்வார்கள். இதுவரை எனக்கு நேர்ந்ததில்லை. காரணம், ஒருவேளை, நான் மெதுவாய் எழுதுபவன்தான். ஆனால் ஓயாமல் எழுதிக்கொண்டிருப்பவன் தினம், சங்கன்பமாக வெள்ளைக் காவதத்தைக் கறுப்பாக்குகிறேனோ இல்லையோ, நெஞ்சில் எழுத்து கிளைத்துக்கொண்டேயிருக்கும். இது என்னால் தவிர்க்க முடியாத நிலை...தேக