பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 லா. ச. ராமாமிருதம் தான். ராக ஆலாபனை எதுக்கும் கட்டுப்படாதது. உடம்பில தெம்பு இருந்தால் 3 நாள் கூடப் பாடலாம். ஈடுபாட்டுக்குத் தகுந்த மாதிரி நம்பளை இழுத்துண்டு போற சக்தி ஆல#1.1னைக்கு உண்டு , அப்படி ஆலாபனை பண்ற சமயத்துல அதில் உண்டாகிற வண்ணக் குழைவுகள் எனக்குள்ளும் உண்டாகிண்டே இருக்கும். உன் பார்வையால் அதைப் பாக்க முடியுமான்னு: கேட்டால் என்னால் பாக்க முடியறதுன்னு சொல்ல நான் தயார். இந்த Musical effectஐ, ஏன் என் எழுத்தில் கொண்டு வர முடியாதான்னு நான் அப்பவே யோசிப்பேன். வார்த்தைகளை உச்சரிக்கும் ஒசைக்கும் Musical effect உண்டு. வார்த்தைகள் ஒன்றோட ஒண்னு குழையறபோது ஒரு நெகிழ்ச்சி உண்டாகும். அதே மாதிரி, Sound ஐ break பண்ணினா, எல்லாமே ஸ்வரங்கள், அந்த ஸ்வரங்களின் இழைவுக்கு ஏத்தா மாதிரி ராகங்கள் பிடிபடும். ஸ்வரங் கள்’ங்கறது என்ன? ஒசையின் ஒழுங்குபடுத்திய attarge ments, ...ஏற்பாடுகள் வார்த்தைகளையும் பிசிறு எடுத்து reguiate usårsafarráð fysir Musicai effect 2-girl-r&#5 முடியாது. Music sound எல்லாம் மூல ஆதாரத்தை ஆதி மூலத்தை) நோக்கமாகக் கொண்டது. They are al aiming at the original source, Musicஇல் ஆழ்ந்தால் எனக்கு சில pictures கிடைக்கத் தொடங்கினது. ஒருமுறை மதுரை சோமு, சிந்து பைரவியில் பாடிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். பிர்க்காக்களாக அடுக்கிக்கொண்டே இருந்தார். ஏதோ ஒரு இடத்தில் அவரோட குரல் உடைஞ்சது . அபகரமா உடையலை உடைஞ்சதிலேயே ஒரு அனுசுரம் இருந்தது. அத்தி கனத்தில் என் நெஞ்சுல சின்ன வெள்ளைக்கல் வந்து மோதினாப்டல் இருந்தது. 24 மணி நேரம் அந்த வலி எனக்கு இருந்தது: