பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 லா. ச. ராமாமிருதம் பதித்ததும், பிள்ளையார் பார்வையில் என்ன உயிர்! என்ன உக்கிரம்: சிவந்த விளிம்பில் கறுவிழியாக குந்துமணி மாறி விடுகிறது. என்ன தத்ரூபம்! அப்போது தோன்றுகிறது. அந்தக் குந்துமணி இல்லாமல் பிள்ளையார் இல்லை ஆனால் பிள்ளையாரில்லாவிடில் குந்து மணிக்குப் பலனுமில்லை பயனுமில்லை. பொருளுக்கும் சொல்லுக்கும் உள்ள உறவு இதுபோல்தான் என்று சொல்லலாம். ஆகவே சொற்கள் வெறும் உமியாகிவிடுவதோ, கத்தியை இட்ட உறையாக மாறுவதோ, சொற்களைப் பயன்படுத்துவதை-இல்லை மாற்றிக்கொள்கிறேன். ப்ரயோகம் செய்வதைப் பொறுத்தது. உ ல்மேல் சதைபோலும், பொருள்மேல் படர்ந்து கொண்டு பொருளை அடக்கிய சொல்: பொருளில் அடக்கிய சொல், அழகு கொடுத்துக்கொண்டு, அ ர் த் த ம் கொடுத்துக் கொண்டு வளர்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கும் சொல்... {'என் சொற்கள்’ என்கிறேன். சொற்கள் என் ப்ரத்யேக சொத்து இல்லை என்று அறியேனா?) அப்படியும் நான் சொல்வதில் உண்மை உண்டு. என் பரம்பரையில் தமிழ்மணம் உண்டு. என் பாட்டனார் தமிழ்ப் பண்டிதர். வரகவி. அவருக்குப் பதினாறு வயதில் பிள்ளையார் அவர் வாயில் கற்கண்டு போட்ட மாதிரி கனவு கண்டாராம். விழித்ததும் பாட ஆரம்பித்துவிட்டார். அவருடைய தங்கை, அவளே என் தாயைப் பெற்ற பாட்டி; நன்னூல், நைடதம் பாடம் பண்ணியவள். தன் பாட்டுக்கள் அமைந்திருக்கும் இலக்கணம் பற்றி அண்ணன் தங்கையிடம் கேட்டுத் தெளிந்து கொள் வாராம். என் பாட்டனாரின் உடன் பிறந்தோர் எழுவரும் கம்பராமாயணத்தை அலசு அலசு என்று அலசி, மேற் கோள்கள் அதிலிருந்த எடுத்துக்காட்டி விபரீதமான எதிர் வாதங்கள் பேசுவார்களாம். அவர்களுக்கும் முன்னால் என் கொள்ளுப்பாட்டி-என் பாட்டனாரின் தாயாரிடம் ஒரு மண்டலம் எங்கள் குல தெய்வம் அம்பாள் விளையாடினாளாம். எழுதப் படிக்கத்