பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லோடு என் உறவு 69 தெரியாத கைநாட்டுப் பேர்வழியின் வாயினின்று திடீரென வேதம், வியாகர்ணம், தர்க்கம், மீமாம்ஸம், தத்துவம் புறப்பட்டனவாம். கற்றறிந்த பண்டிதர்கள் வீட்டுக்கு வந்து வியப்புறுவதுடன் விளக்கங்களைக் கேட்டு அறிந்து போவார் களாம். அறுபது வருடங்கள் அவளும் அவள் கணவரும் ஒருநாள் தவறாது கோயிலுக்குப் போய் அர்த்தஜாம தரிஸ்னம் கண்ட பின்னரே உண்டனர் எனும் பழக்கத்தின் விளைவு: அவர்கள் வழியில் வந்த பிரசாதம் நான் . ஆகையால் என் சொற்கள், என் சொற்களுடன் என் சொந்தத்தின் நியாயத்தைச் சொல்கிறேன் , தவிர, Words in creative process எனும் தலைப்பின் அடிப்படையில் இந்தப் பீடிகை தேவைப்படுகிறது. இந்தக் கட்டுரையின் விஷயமும் இந்த ரீதியில் சற்று தனிப்பட்ட முறையில் அமைந்திருப்பின், அதற்கேற்றபடி உங்கள் நோக்கையும் Condition பண்ணு கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்களேன். நான் எழுதத் தொடங்கிய நாளிலிருந்தே அதாவது 1937/38-எனக்கு வயது 19|20 இருக்கும்-எனக்குச் சுபாவ மாகவே என்னை அறியாமலே சொற்களைத் தேடும் ஆர்வம் இருந்தது என்று இப்போது உணர்கிறேன். தேடுவது என்றால் Dictionary இல் அல்ல. பொதுவாக என் உட்புலன், ஒசைகளை, என்னுடைய அவ்வப்போதைய சூழ்நிலையின் ஒசைகளைப் பிறர் வாயினின்று வரும் வார்த்தைகளின் தனித்தன்மையை-ஒட்டுக் கேட்க, ஒட்டுப் பார்க்க ஆரம் பித்துவிட்டது. அதை வெட்கம்விட்டே சொல்கிறேன். Creative Processஇல் புலன் மாறாட்டம் எனக்கு ஆச்சரிய மில்லை. செவி பார்க்கும். கண் கேட்கும். பாதங்களடியில் மணியாங்கற்களின் சரக் சரக் மரங்களில் இலைகளினுள்டே காற்றின் பெருமூச்சு