பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 லா. ச. ராமா:கிருதம் தில் ஊறிப்போய், இடம், பொருளுக்கு ஏற்ற இடத்தில் தாமாக வந்துவிடுவதை நான் பதறி ரப்பர் போட்டு அழிப்ப தில்லை. இருந்துவிட்டுப் போகட்டுமே! அதனுடைய இடம் அது இல்லாது அங்கு அது விழவில்லை. என்னுடைய சொற். களில் என் குறிக்கோன் பாஷை Communicationதான்மொழி அல்ல. இந்த Communication ஜாதி, இனம், இடம் யாவருக்கும் அப்பாற்பட்டது. சிருஷ்டியின் மூலமூர்க்கத்தில் உண்டானது, ஓசை பிறந்ததும் அதனின்று பிரிந்தது வார்த்தைகள் அல்ல. சொல்தான் பிறந்தது. சொல் வேறு, வ:ார்த்தை வேறு, சொல் என்பது நான், என் தன்மை, என் பொருள், என் தேடல், என் ஆரம்பம், என் முடிவு, அதற்கும் அப்பால் என் மறுபிறப்பு, எண்ணற்ற பிறவிகள் மூலம் என் புதுப்பிப்பு. ஆதிமகனும் ஆதிமகளும் ஒருவரையோருவர் கண்டு, ஒருவரோடொருவர் பேசமுயன்ற அந்தப் புனித நிலையில் அவர்கள் கண்ட முதல் சொல்லின் தரிசனத்தை, அனுமானத்தில் கண்டு அஞ்சுகிறேன். இந்த சமயத்தில், எப்பவோ இலக்கியத்தில் கொச்சை” என்கிற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையில், ஒரு சிறு பகுதி-சில வார்த்தை கள் அப்பட்டமாக அவைகளே அல்ல-அவைகளின் சாராம்சம் நினைவிற்கு வந்தபடி: "குழந்தை பூமியில் விழுகையில், தாயின் வலியில் அவள் வீறல் கொச்சை குழந்தையின் அழுகை கொச்சை, குழந்தை பாலின் இடம் தேடிக் கண்டு சுவைக்கும் சமயம் அதனின்று வெளிப்படும் சப்தங்கள் கொச்சை தாய் தன் பிரிவு தாங்காமல் குழந்தையைக் கொஞ்சும் சமயம் அவளிடமிருந்தும் வெளிப்படும் குழறல்கள் கொச்சை, ஆனும் பெண்ணும் தழுவுகையில் அவர்கள் முத்தத்தின் எச்சலில் கொழி கொழத்து வரும் சொற்கள் கொச்சை,