பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

デ会 சை, ச. ராமாமிருதம் -எனக்குக் கொடுத்திருக்கும் தலைப்பில் இந்த வாக்கியத் தொடரிலேயே சொல் ஒரு சக்தி என்கிற உண்மை: வெளிப்படவில்லையா? சொற்கள் அவைகள் விெ ட்கமற்றவை. எத்தனை மொழிகளிலிருந்து திருப்பிக் கொடுக்காத கடன் களாக எத்தனை வார்த்தைகள், வாக்கியப் ப்ரயோகங்கள், ஒரு மொழியினின்று இன்னொரு மொழியில் கலந்துஅம்மாடி, பாஷையைவிடப் பெரிய ஜீவநதி எது?-சப்தங்கள் மாறி, அர்த்தங்களுக்கு எத்தனை சாயைகன் , சாகல்கள், சாயங்கள், அழகுகள் . சிருஷ்டிக்கு அர்ச்சனை மலர்கள் : இந்த முறையில் மனிதப் பரம்பரையின் பண்பின் பிம்பங்களாக சொற்களை ஏன் பார்க்கக்கூடாது? அன்றொரு தாள், வெகுவெகு நாட்களுக்கு முன்னர் 10 15 வருடங்களுக்குக் குறைவில்லை, தெருவில் .ோய்க்கொண் டிருக்கையில் மாலை இருளில் வாரோ ஒரு ஸ்திரி இன் னொரு ஆளிடம் பேசும் குரல் பிரிந்து வருகிறது. "அந்த ஆசாமியா நீ சோல்றதிை நம்பமுடியவியே. அவன் முதுகைத் தட்டினால் வயித்திலிருக்கிறதைக் கக்கிக் கொடுத்துஇவானே ஸ்தம்பித்துப் போனேன்! இந்த தாட்டுப்புறத்தாளிடம் இத்துணை கவிதையா? போன வாரம் விறகு மண்டியில் அடுப்புக்கரி வாங்கப் போனேன். நாடார், போன வாரம் கிலோ விலை ரூ. 50 இன்னிக்கு 60 கிஷ்ணாயில் தட்டுப்பாடு ஆன வுடனே கரி மேலும் மார்க்கட் பிரியமாயிட்டுது. பிரியமா யிருக்கிறதாம் விலை உயர்வை எவ்வளவு நேர்த்தியாக வெளிப்படுத்துகிறார்! அண்டை வீட்டுக்காரர் பெண்ணின் கலியானத்துக்குப் போயிருந்தேன், மணப்பெண்ணின் தம்பி, சின்னப் பையன், பதினாலு வயதிருந்தால் அதிகம்-என்னை நன்கு விசாரித்து