பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லோடு என் உறவு 77 எல்லோரும் இந்த Creativs processஇல் தோன்றி, இயங்கி அவரவர், அவரவர் சொல்லைச் சொல்லி, சொல்லி யானதும் அதிலேயே மறைந்தவர்கள்தான். சிந்தனைக் கென்றே ஒரு தட்சிணாமூர்த்தியைப் படைத்தேன். அவனே சிவன்; அவனே தவன்; இன்னமும் உயிரின் மர்மம் என்ன? எங்கே போகிறோம்? என்னுடைய பொருள் என்ன? எனும் சிந்தனையில் ஆழ்ந்து கிடக்கிறான். சிந்தனையே Creative Process எழுத்தில் முடக்கிய சிந்தனை இலக்கியம். எழுத்தறி வித்தவன் இறைவனாகும். சிந்தனையை எழுத்தில் சொல் லாகப் பார்க்கிறேன். மானுடத்தின் மாண்பைச் சொல்லிக்கொண்டு, அதை மரபுக்குச் சாஸனமாக்கி மரபுக்கு மறக்கும் இயல்பு ஏற்படும் போதெல்லாம் நினைவு மூட்டுவது, நினைவு மூட்டுவதற்குத் தான் இலக்கியம். இந்த லகசியத்தில் இந்த ஆணவத்தில், இந்த அர்ப்பணத்தில் அந்த இலக்கியத்தை உருவாக்கும் சொற்கள் என்ன வலுவுள்ளதாக அமைந்திருத்தல் வேண்டும்! இங்கே ஒரு இடைமறிப்புகட்டுரையில் இப்போது உபன்யாச வாடை அடிக்கிறது என்று தோன்றுபவர்களுக்கு நான் சொல்லக்கூடியது இதுதான்: வாழ்க்கையின் பந்தாட்டத்தில் என் நம்பிக்கைகள் ஏதேதோ கலைந்து குலைந்து மறுத்து மறைந்து அதற்கேற்றவாறு என் சிந்தனையும் எங்கெங்கோ ஓடி ஆடித் திரிந்து கடைசியில் தெளிந்தது. நமக்குகந்தது. நமக்குரியது, நாம் வந்த மரபில் நான் வந்த வழி எனும் உண்மைக்குத் திரும்புவதே. நம்நாடு ஆத்மீக நாடு. அயோத்தியினின்று லங்கைவரை ராமன். அவனையொட்டிப் பல சீலர்கள் திரிந்து அவர்கள் பாதம் பதிந்த மண்ணில் பிறந்தவர் நாம்.