பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔莎 லா. ச. ராமாமிருதம் மாமரம், கிளி மாம்பழத்தைக் கொத்தி, கொட்டை என் தலைமேல் விழந்தது, அசிங்கம்' என்று உடம்பைச் சிலிர்த்துக்கொண்டாள். அவள் துணுக்கு மழலை வார்த்தை களில் விவரித்த அந்தத் துணுக்குச் சம்பவத்தினின்று "மஹாபலி என்ற ஒரு கதை தோன்றி உருவாயிற்று. இத்தனை வருடங்களுக்குப் பின்னர், ஒரு வாரப் பத்திரிக்கை யில் பூரீ இரா. தண்டாயுதம் அந்தக் கதையினின்று பெரும் பகுதிகள் தந்து அதுபற்றி எழுதியிருப்பதை சமீபத்தில் படிக்க நேர்ந்தமையால் அதுபற்றி இங்கு சொல்லத் துணிந்தேன். இத்தனை வருடங்கள் கழித்து-என் கதை தான், அவர் தந்திருக்கும் பகுதிகளைப் படிக்கையில் எனக்கு பாதிப்பு இப்பவும் ஏற்படுகின்றது-என் மருமகள் தலைமீது விழுந்த மாங்கோட்டை எனக்குத் தந்த கதையின் சுருக்கம் சாலையோரம் ஒரு மாமரம் மாமரத்தடியில் ஒருவன் இறந்து கிடக்கிறான். அவன் இறந்த மர்மம் என்ன? அந்த மாமரம் அறியும். மாமரம் அதில் காய்ந்து கனிந்து அந்தந்த பருவத்துடன் கழிந்த பல தலைமுறைகளின்பாட்டி. அப்படி அந்த மரத்தில் ஒருசமயம், பூ வைத்து, பிஞ்சாகி, காயாகிய ஒரு புது உயிரை அதன் சோதரர் எனும் இலைகள் பட்சிப் பார்வை, சிறுவர்களின் கல்லடி, பெரியவர்களின் கொம்படியிலிருந்து மறைத்துக் காத்து, படிப்படியாக வளர்ந்த ஒரு பழத்தின் பருவங்கள் விஸ்தரிக்கப் படுகின்றன. மாங்கணியாள் பருவமடைகிறாள். அடுத்து அவள் பருவ வேதனை. மாமரத்தில் வேர்களினின்று பழத் துக்கு சேதி பறக்கிறது. மகளே உனக்கு வரும் மரைன்ன்ே உனக்கு யமன் அவனுக்காக காத்திருக்கையில் உன் மரணத் துக்குக் காத்திருக்கிறாய், உன் நிலைக்கு ஆறுதலோ அதிணின்று காப்பாற்ற வழியோ என்னிடம் இல்லை. ’’ மாங்கனியாள் அப்படியே தன் விதிப்பயனுக்காகக் காத்துத் தவமிருக்கிறாள்.