பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லோடு என் உறவு 母宽 மாங்கனியாளுக்கு வேளை வந்துவிட்டது. ஒருநாள் அதன் பார்வைக்கு, ஆகாயத்தினின்று புறப்பட்டதோர் புள்ளி கீழே நெருங்க நெருங்கப் பெரிதாகி, பஞ்சவர்ணக் கிளியாக மாறி, கிளி, பழமிருக்கும் கிளையிலேயே அமர்ந்ததும். பழம் பட்சியின் கண்ணுக்குப் பட்டுவிடுகிறது. அவ்வளவுதான். கிளி மாம்பழத்தைப் பறித்து, தன் கால் களுக்கிடையில் தள்ளி இடுக்கி, தன் மார்பின் மெத்"தில் கணிகை முதலில் அழுத்தியதும், கணியின் அந்த ஆலிங்கன மூர்ச்சையில் கிளி, அதைக் கொத்திக் கிழித்துத் தின்கையிலே அந்த மரணாவஸ்தையில், உயிர் ஊசலாடுகையிலேயே மாங்கணியாள் அறிகிறாள். அவள் பயனேதான் அவள் பிறவியின் பலன். அந்தப் பலனேதான் அவள் முடிவு. அந்த முடிவேதான் அவள் நிறைவு. மாங்கொட்டை கீழே விழுகிறது. கிளி பறந்துவிடுகிறது. அவ்வழி வந்த ஆள் அதை மிதித்து வழுக்கி விழுந்து இசை கேடாய் மண்டையில் அடிப்பட்டதாலோ, ஏற்கனவே இதய பலவீனம் காரணமோ இறந்துவிடுகிறான். இது சமுதாயத்தின் முடிவு. ஆனால் உண்மையான காரணம், அவன் ஒரு மஹாபலியை மிதித்துவிட்டான்-அந்தப் பாபம் அவனைக் கொன்றுவிட்டது. இயற்கை சக்திகளின் தீர்ப்பின் நிறை வேற்றம்-Inspiration பற்றி இதில் இச்சமயம் இம்மட்டில் போதும். inspiration எப்படி நேர்கிறது. என்று தெரியாது என்று சொன்னேன். இந்த Creative process மட்டும், அது நிகழ்ந்து கொண்டேயிருக்கையில், அதன் கதி, முறை இப்படித்தான் என்று திட்டவட்டமாகச் சொல்லமுடிகிறதா என்ன? கண்டிப் யாக இல்லை என்றுதான் சொல்வேன். அதுபற்றி அலசுவ 5 سس « سه