பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 லா. ச. ராமாமிருதம் தெல்லாம் பின்னோக்கில்தான். சேஷ ஹோமம் ஆனபிறகு, கல்யாணச் செலவைக் கணக்கு பார்க்க உட்காருகிற சமாள் சாரம்தான். வீட்டைக் கட்டின பிறகு சுவரில் சொற்களை எண்ணுகிற சமாசாரம்தான். விஷயமும், மீடியமும், திடீர் என்று கடிவாளத்தை அறுத்துக்கொண்டு இஷ்டத்துக்கு ஓடாமல் அடக்குமுறையில் இருக்கிறபடி எழுத்தாளன். தன் சிந்தனை ஒட்டத்தையும் சொல்லும் முறையையும் பழக்க வேண்டும் சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பதில் எழுதும் எழுத்தும் அடங்கியது. இதற்கு உதவுவது படைப்பாளிக்கு இயல்பாக உள்ள Character, சொல் நேர்மை, திடசித்தம்: இத்யாதி, இத்யாதி. இதென்ன இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கு கிறான் இந்த மனுஷன்? கிட்ட கிட்ட வந்து சொந்த விஷயத் தில் தலையிடுகிறான்? Characterக்கும் எழுத்துக்கும் என்ன சம்பந்தம்? என வெகுண்டெழும் நேயர்களுக்கு நான் சொல்லக்கூடியது ஒன்றுதான். இதுவரை நான் சொல்வி வந்திருக்கும் Contextஇல் சொல் என்பது ஒரு தவம். தவத்தில் இறங்குவதற்குரிய தகுதிகளைச் சொல்லாமல் என்னால் இருக்க முடியாது. இந்தத் தகுதிகளும் நான் உளற வில்லை, Creative processல் சேர்ந்தவைதான். படைப்பாவி தன் எழுத்தை உருவாக்கிக் கொண்டிருக்கையிலேயே அவனே gågå Creative precessgå Evolve 4333irgiyogā. கிறான் என்பதையும் நினைவு மூட்டுகிறேன், விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தின் ஒரு சில படிகளில் ஏறியபின் எழுத்தாளனுக்கும் சொற்களுக்கும் இடையே தோன்றி படிப்படியாக விருத்தியாகும் உறவு விசித்திர மானது, உயிருள்ளது. இதை என் அனுபவத்தினின்று இன்ச வேதனையினின்று திடமாகக் கூறுகிறேன். நினைவின் ஆ.