பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லோடு என் உறவு 83 வாரத்தினின்று உணர்ச்சிப் பிழம்பாகி, பிழம்பு எண்ணம் (idea) ஆகி, பிறகு அதன் முதல் வார்படத்தில் முரட்டுத்தன மாக, அதாவது அதன் Theme இன் சட்டத்துள் மாட்டிக் கொண்டபின் சிந்தனையில் ஊறி, கர்ப்பவாஸ்ம் கண்டு, இருந்து சூடேறி எழுத்து வடிவுக்குத் தயாராகி-இந்த Creative processஇல் ஆக்கப்பொழுது ரிஷிகர்ப்பமாகவும் இருக்கலாம். கஜகர்ப்பமாகவும் இருக்கலாம், விஷயம் காயிதத்துக்கு ஏறாமலேகூட இருக்கலாம். கடைசியாகச் சொல்லப்பட்ட காயிதக் கட்டம் அவ்வளவு முக்கியமல்ல, நடந்தால் நடக்கட்டும். நேராவிடில் போகட்டும். ஆனால் அந்தக் குறிப்பிட்ட படைப்பு நேர்ந்தாகிவிட்டது. பஞ்சபூதக் கதைகள் என்கிற வரிசையில்.-புனல் அனல், மண் வாயு-இந்த இயல்புகளை மனிதன் உருவாக்கி அவை களை நடுநாயகமாகக் கொண்டு, கதைகள் உருவாகி இரண்டு வருடங்களில் வெளியாயின. ஆகாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதை, தலைப்பு ஏகாவித்து கண்டு சூளையி விருந்து முழுமை பெற்று அச்சிலே ஏறும்பொழுது பத்து வருடங்கள் கடந்துவிட்டன. இந்த வரிசைதானே முடிவு பெறும் எனும் திண்ணம் என் உள் உணர்வு அறிந்திருந்த போதிலும் எப்பொழுது என்பது என் வசத்திலில்லை. நிற்க. படைப்பு சொல் ஆகிக்கொண்டேயிருக்கையில் எழுதப் படும் விஷய பலத்துக்கு ஏற்றவாறு, அதில் படைப்பாளியில் ஈடுபாட்டைப் பொறுத்தவாறு ஏதோ ஒரு கட்டத்தில் சிந்தனை அருவி, கதை சொல்லும் முறையைத்தான் எடுத்துக்கொண்டு (take wer) விடுகிறது. இதனால் எழுத்தாளன் மீடியத்தின் அடக்குமுறையை இழந்துவிட் டான் என்று அர்த்தமல்ல. ஒடத்தை கரை நோக்கி, சுழல் கொண்டுபோய்க் கொண்டிருக்கிறது என்னதை உணரமுடி