பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. லா. ச. ராமாமிருதம் அடைந்திருக்கும் இடத்தை தன் உள்ளிலும் புறத்திலும் சுற்றுமுற்றும் பார்த்துத் தெரிந்துகொள்வதை சத்யம் என்று சொல்லிக்கொள்ளலாம். வந்து சேர்ந்திருக்கும் இடத்தை அடையாளம் கண்டுபிடித்துக்கொள்ள முடிந்த தெனில் அது அவனவன் பாக்கியம். இதற்குமேல் சத்யத்தின் விசுவரூபத்தை நம்மால் சொல்ல இயலாது. சரி, எனக்கு உள்ள நெகிழ்ச்சி நேரும் காரணம், சமயம், விளைவு இவைகளின் அடிப்படையை நான் அறியேன். சத்யம்: அதேபோல் என் ஆயுசையே கஜக்கோலாகக் கொண்டு நான் அளக்க முயன்றாலும் சத்யத்தின் அடி முடி கான வல்லேன் . செளந்தர்யம்:--இது இந்த ஆயுசிலேயே ஒரளவேனும் எட்டாத தூரத்தில் இல்லை. சிருஷ்டி மனிதனுக்கு வழங்கி யிருக்கும் பல கொடைகளில் மகத்தானது. பிரக்ஞை. இந்தப் பிரக்ஞையின் முறையான உபயோகத்தையே பரவ லான முறையில் செளந்தர்யம் என்று சொல்வேன். இது மனிதத் தன்மைக்கும் பொதுவாகப் பொருந்தும் Defination எழுத்துக்கு இந்த Defination-பொருத்தி அதனால் எழும் விஸ்தாரத்தைக் காண்கையில், அதன் விவரிப்பில் எனக்குத் தனி உற்சாகம். நான் அர்ப்பணித்துக்கொண்ட எழுத்தாளன் அல்ல. அதாவது என் ஆவி, உடல் இன்பம் யாவுமே எழுத்துக்குத் தியாகம் என்கிற எண்ணம் எனக்கில்லை. ஆனால் செய்வன திருந்தச் செங் என்பதில் எனக்கு ஊக்கம், நம்பிக்கை குன்றாதனவை. நான் இந்தத் துறையில் கடினமான உழைப்பாளி என்பதை நான் நன்கு உணர்வேன். என் எழுத்தில் அழகு காண்பதில் என் ஆர்வம் இன்பம் மட்டுப்பட வில்லை. கூடியே இருக்கிறது. கூடிக்கொண்டே வருகிறது.