பக்கம்:உதட்டில் உதடு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவடிப் புருவம் பார்த்தான்
கன்னத்தில் மின்னல் பார்த்தான்'
சேவலின் தாடி வர்ணம்
சிவப்பாகும் உதட்டில் பார்த்தான்
பூவுக்குப் புருஷ னுகும்
வண்டோடு கூந்தல் பார்த்தான்
தாவிடும் ஆசை யாலே
தனித்தனி அங்கம் பார்த்தான்.

'வான்வந்து கண்ணுக் குள்ளே
வளருதே! துள்ளும் கெண்டை
மீனுக்கு இந்தப் பெண்ணின்
முகத்திடம் வேலை என்ன ?
மான்விழி இவள் விழிக்குள்
இருப்பதேன்?’ என்று எண்ணி
தேன்பார்த்தான் பேச்சில், ரேகைத்
தொழில்பார்த்தான், பார்வையாலே.

மலர்க்கொடி போலே ஆடி
வளர்கின்ற இடையைப் பார்த்தான்.
'நிலத்திலே நிலா விழுந்து
விட்டதா? முகமா ? இவ்வூர்க்
குளத்திலே பூத்திருக்கும்
தாமரை தானு? ' என்று
தலைதுாக்கிப் பார்த்தான், தையல்
தலையைத் தூக்காதபோது !

கண் ணடி ஒடு போலே
கைநகம், விரல்கள், பொட்டு
உண்டாக்கும் அழகு, காதில்

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/16&oldid=1067195" இலிருந்து மீள்விக்கப்பட்டது