பக்கம்:உதட்டில் உதடு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒடித்துக்கொண்டிருந்தாள்;மூக்கை
உறிஞ்சி கொண்டிருந்தாள் மங்கை.

மேல்வேட்டி போட்டுக் கொண்டு
மீசையை, ஆட்டுக் குட்டி
வால்போல மேலே தூக்கி
வளர்த்துள்ள இளைஞன், பச்சை
நூல்சேலை உடுத்தி யுள்ள
நங்கையைப் பற்றிக் கேட்ட
கேள்விக்கு பதிலைச் சொல்லத்
தொண்டையை கனைத்துக் கொண்டான்.

“வெண்பஞ்சு போல் நரைத்து
இருக்கின்ற பாட்டி அம்மா !
நண்டுக்கண் போல் இருக்கும்
வேப்பம்பூ மாலை சூடி
மண்டலம் ஆண்ட பாண்டி
மன்னவன் போன்றேன்; கீர்த்தி
சண்டவன், கலைஞன் ; இந்தக்
கோதையை மணப்பான்! ” என்றன்.

கேட்டதும் மகிழ்ந்தே போனள்
கிளிப்பேச்சுக் காரி,ஆனல்
பாட்டியோ அவளைப் பார்த்துப்
பரிகாசம் செய்தாள். காசை
நீட்டினள். வாங்கிக் கொண்டான்.
அதிரசம் தந்தாள். பெற்றன்.
மூட்டையைக் கட்டிக் கொண்டான்,
விடைபெற்றன். எழுந்தான். போனன்.
போய்க்கொண் டேஇ ருந்தான்
புழுதிமண் வீதி மேலே !

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/18&oldid=1067513" இலிருந்து மீள்விக்கப்பட்டது