பக்கம்:உதட்டில் உதடு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நான்கு வேளை

காலை

அவன் : நீலக் கிழக்கு சுடர் ஆச்சு-வயலில்

நிற்கும் கதிர்கள் முற்றிப் போச்சு ;

அவள் : ஆகையினால் நீங்க

அறுவடைக்குப் போங்க

அதற்கு அரிவாள் இந்தாங்க!


பகல்


அவன் :நெருப்பு வெய்யில் வந்தாச்சு-பனைமர

நிழலை நம்பி வீணாச்சு ;

அவள் : அந்தத் துயர் நீங்க

வந்த வெய்யில் தாங்க

முந்தானைக் குடை இந்தாங்க !



அந்தி



மேற்கு வானம் ரத்தம் ஆச்சு-உன்னால்

மலர்ந்த உதடு வெள்ளை யாச்சு ;


அவள் : வாசனையும் ஓங்க

சிவப்பு நிறம் தேங்க

வெற்றிலைப் பாக்கு இந்தாங்க !


18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/20&oldid=1352080" இலிருந்து மீள்விக்கப்பட்டது