உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உதட்டில் உதடு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இனிக்கும் பதில்


அவள் : முற்றிக் கனிந்திட்ட கோவைப் பழம்போல
முன்பே சிவந்த உதடுகளை ,

வெற்றிலை போட்டின்னும் ரத்தப் படுத்துதல்
விவேக மாகுமோ காதலரே ?

அவன் : வண்டு குலவிடும் தாமரைப் பூபோன்ற
வர்ண சிவப்பு முகத்தினிலே ,

வண்ணக் கிளிப்பிள்ளை வாய்நிறப் பொட்டுநீ
வைப்பது மட்டும் சரிதானா ?

அவள் : மிதக்கும் நிலாமுகப் பெண்ணின் உதடுகள்
மென்று தின்கின்ற கற்கண்டு என்றால் ,

இதுவரை எந்தனை முத்தமிட்டும் அவை
இன்னும் கரையா திருப்பது ஏன் ?

அவன்: வெட்டிய மாம்பிஞ்சு போன்ற விழியினால்
‘வாருங்கள்’ என்று அழைப்ப வளே ,

சுட்ட கொழுக்கட்டை மேல்கலத் தண்ணீரைக்
கொட்டினும் மாவு கரைந் திடுமா ?

பல்லிமுட்டை போன்ற முல்லை அரும்பினைப்
பின்னிய கூந்தலில் வைத்த வளே ,

ஒல்லி இடைதன்னில் மின்னல் அடிக்குது
ஓசை மட்டும்அங்கு இல்லாத தேன் ?

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/23&oldid=1876512" இலிருந்து மீள்விக்கப்பட்டது