பக்கம்:உதட்டில் உதடு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
சம்மதம்

ஆண் : நிமிர்ந்த பம்பரம் போல-யானை
நெற்றியின் மேடு போலே-மலை பாராய்!

பெண் : ஆகாயம் கட்டிய கொட்டகையோ மலை-கண்ணா?

ஆண் : அசைகின்ற பூமியின் கொப்புளந்தரன்மலை-கண்ணே!

ஆண் : பாம்பின் சட்டையைப் போல-வெடித்த
பட்டையில் ஊற்றிய பால் போல-அருவி பாராய்!

பெண் : பெண்கள் உடுத்தும் மேல் ஆடைதான் இப்படி ஆச்சோ?

ஆண் : தண்ணீர்க்கும் வால் உண்டு என்பதற்(கு) இது சாட்சி!

ஆண் : மரகதக் கம்பளம் மேலே-மயில்
இறகுகள் சிற்பது போலே-தோட்டம் பாராய்!

பெண் : காதலரால் இந்தத் தோட்டம் கசங்காகோ-கண்ணா?

ஆண் : குளிர்ந்த பனித்துளியாலே கல் உடையுமா-கண்ணே!

பெண் : எறும்பு எந்திய பொரி போலே-சோழி
இரண்டு சேர்ந்தது போலே-அரும்பு பாராய்!

ஆண் : இந்த அரும்புக்(கு) எப்போது கல்யாணம் ஆகும் ?

பெண்: இதழ்கள் மலர்ந்தபின் வண்டுக்(கு) இது தாரம் ஆகும்!

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/25&oldid=1516359" இலிருந்து மீள்விக்கப்பட்டது