இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என்று உதட்டால் எதிர்த்தாள் ; ஆயினும்
கொஞ்சும் ஆசை நெஞ்சில் இருந்தது.
ஊடுதல் பொறாத வேடுவர் தலைவன்
செடியை வளைத்து சிறுபழம் பறித்து ,
அந்தப் பழத்தால் அவளை அடித்தான்.
கயல்விழி மாதும் கையால் அடித்தாள்.
அடித்த கையைப் பிடித்துக் கொண்டு
வலிக்காத முத்தம் வைத்தான் உதட்டில்.
வெள்ளை நிலாவில் வாலிபக் காதலர்
உப்பு சமுத்திரம் ஒத்த விழியால்
ஓசை இல்லாத பாஷைகள் பேசி
ஆசை முடித்து எழுந்து போகையில்
ஓடும் காற்று உடையை இழுத்தது !
26