பக்கம்:உதட்டில் உதடு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காற்றுக்கு வர்ணம் பூசலாம்

காற்றுக்கு வர்ணம் பூசலாம்-அது
காணும் பொருளாய் இருந்திடில்-மழைத்
துாற்றலை முத்தாய் மாற்றலாம்-கடல்
சிப்பி சிநேகம் கிடைத்திடில்-மேகம்

ஊற்றுகின்ற தண்ணீரினல்-மண்
வயிற்றில் கர்ப்பம் உண்டாக்கலாம்-ருசி

ஏற்றும் உதட்டிலே இருக்கும் வெளிச்சத்-தால்
இருட்டைத் துரத்த முடியுமோ ?

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/29&oldid=1067604" இலிருந்து மீள்விக்கப்பட்டது