பக்கம்:உதட்டில் உதடு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யானைவால் கரும்பு

ஆரம் பத்தில் யானையின் வால்போல்
முளைத்த கரும்பை முதிர்ந்ததும் வெட்டி
வண்டியில் ஏற்றி விற்றுக் கொண்டே
போனன் கந்தன். போகையில் அந்திப்
பொழுது மாண்டு முழுநிலா வந்தது.

வந்த நிலவால் உலகம் குளிர்ந்தது.
வெள்ளி விளக்கைப் பிள்ளைகள் அழைத்தனர்.
கணவனை மனைவி, கண்ணல் அழைத்தாள்.

நெஞ்சு இனிக்கும் நிலா நேரத்தில்
வீட்டுக் காரியின் உதட்டின் நினைவு
வண்டி ஒட்டிக்கும் வந்தது, வந்ததும்,

“வெடித்த வெள்ளரிப் பழம்போல் வெண்ணிலா ஆடை
உடுத்தா மலே திரியும் வெண்ணிலா
கடலில் உடல் கழுவும் வெண்ணிலா - குளித்தும்
கறை படிந்தே விளங்கும் வெண்ணிலா.

நோய் வராமல் இளைக்கும் வெண்ணிலா - இரவு
நேரங் தனை வெளுக்கும் வெண்ணிலா
தாய் உள்ளம் போல் குளிர்ந்த வெண்ணிலா வெள்ளித்
தட்டுபோலே அமைந்த வெண்ணிலா,

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/30&oldid=1067628" இலிருந்து மீள்விக்கப்பட்டது