பக்கம்:உதட்டில் உதடு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடோடியின் குரல்

காக்காயின் மூக்கு போலே
கறுப்பான மேகம் எல்லாம்
கல்லுமலை மேல் படுத்து
மெல்ல நழுவுது பார் !

கோலப் புள்ளிபோல் இருக்கும்
கொடிமுல்லை அரும்பு மேலே
தேன்குடிக்க வந்த வண்டு
திரும்புது பார் ஏமாந்து !

அத்திப் பழம் சேப்பு-அவ
மேனி நிறமோ நெருப்பு
முத்தமிடும் கன்னம் ரெண்டும்
முள்ளில்லாத ரோஜாப் பூ !

மரத்தின் கிளையைப் போல
மான்கொம்பு இருந்திட் டாலும்
குருவிஅதில் கூடு கட்டி
குடும்பந்தான் செய்தி டுமோ ?

வாலினல் நீர் குடித்து
வாயினல் பிள்ளை பெத்து
இருட்டை விரட்டு தடி
எங்க ஊட்டுத் திரிவிளக்கு !

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/32&oldid=1069149" இலிருந்து மீள்விக்கப்பட்டது