பக்கம்:உதட்டில் உதடு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வாலிபம் ஏற்பட்டது

பட்டை உடுத்திய பச்சை மரத்தினிலே-கிளை

பக்கத்திலே, இலை கக்கத்திலே, உன்னைக்

கட்டிவைத்து சாறு கொட்டியது யாரு

உந்தன் உடம்பி னிலே-பழமே

உங்தன் உடம்பி னிலே ?

பெண்களின் பாவ டை, வெண் பட்டு சேலையிலே-தேன் பொங்கும் உதட்டிலே, தொங்கும் காத்திலே, வந்து இழையாமல் விண்காலம் போக்காதே -

வாழைக் குருத் தினிலே-நத்தையே வாழைக் குருத்தினிலே!

ஆக்கும் அரிசியைத் தாக்கிச் சுமக்காமல்-மலர் ஆகும் அரும்புகள் எேடுத்து வந்தால், தாக்கி உன்னைப் பெண்கள் தாலாட்டு: காட்டித்-தொடையில் வளர்ப் பார்களே-எறும்பே, தொடையில் வளர்ப் பார்களே !

கத்தத் தெரியாத பூவைக் கெடுத்திடவே-அதன் கற்பைக் கலைத்துமே, அற்பத்தனம் செய்யும் சித்தத்துடன் வந்தால், குத்து உதை விழும், சங்கீதப் பூச்சி களே-வண்டுகளே சங்கீதப் பூச்சிகளே

32.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/34&oldid=1524463" இலிருந்து மீள்விக்கப்பட்டது