பக்கம்:உதட்டில் உதடு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பருவம்
ஊரின் நடுவில் ஒர்குளம்; அதுவும்,
ஆமை ஓட்டின் அமைப்புபோல் இருந்தது.

கிண்ணங்கள் பரவலாய்க் கிடப்பது போல
தடாகம் முழுதிலும் தாமரைப் பூக்கள்
இருந்தன ; அதோடு வண்டுகள் இருந்தன.

வாழைப்பூ போல வால்உள்ள வாத்துகள்
நீரின் அலைகளை நீந்திக் கலைத்தன.

எப்போதும் நீலமாய் இருக்கும் வானில்
சிவப்புச் சூரியன் எழுந்து, உலகை
வெள்ளை யாக்கும் விடியற் காலையில்,
வர்ணப் பறவைகள் விழித்துக் கொண்டன.

மிளகாய்க் காம்புபோல் மீசை வைத்த
வாலிபன் ஒருவன் வடக்கே இருந்து
தூண்டில் போடஅத் துறைக்கு வந்தான்.
பாத்திரம் கழுவப் பெண்களும் வந்தனர்.
பறவைகள் இறகு திறந்து பறந்தன.
வந்த வாலிபன் ஒரிடம் அமர்ந்து
துாண்டியில் வந்து தொத்தும் மீன்களை
கூண்டில் நிரப்பிக் கொண்டே இருந்தான்.

அரும்புபோல் ருது ஆகாத சிறுமியர்,
காதலால் உதட்டைக் காயப் படுத்திக்

37.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/39&oldid=1069156" இலிருந்து மீள்விக்கப்பட்டது