பக்கம்:உதட்டில் உதடு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மங்களம் என்பவள் மறுத்துப் பேசினாள்.
சத்தம் பலத்தது; சிரிப்பும் அப்படி !
மேயும் மீன்கள் எல்லாம் இதனால்
தாண்டிலில் விழாது தாண்டி ஓடின.

மீன்களை முதலிலும், பெண்களைப் பிறகும்
இளைஞன் பார்த்து, எரிச்ச லோடு,
“போதும், கொஞ்சம் பேசாமல் இருங்கள்.
உங்களால் மீன்கள் ஒடு கின்றன’’
என்று சொன்னான். இதற்கு ஒருத்தி,

“ தண்ணிர்த் துறைதான், பெண்களுக் கெல்லாம்
பேச்சு மேடை! புரிந்ததா?” என்றாள்.
மாதுரி என்ற மற்றொரு மங்கை
“வேறு துறைக்கு போ” என்று சொன்னாள்.

"இந்தத் துறையில்தான் அதிகமாய் மீன்கள்
அகப்படும்' என்றான். அல்லி என்பவள்,
“இப்படிச் சொன்னால் ஒப்ப முடியுமா?
குத்து விளக்கில், எந்தப் பக்கத்துத்
திரியைக் கொளுத்தினும், எரியும்” என்றாள்.

அல்லிக்கு மறுமொழி சொல்ல முடியாமல்
துாண்டில் காரன் கண்ணை உருட்டினான்.
குடத்தைச் சுமந்த கோதை கமலா
அந்தச் சமயம் வந்து சேர்ந்தாள்.

அவளைப் பார்த்து அன்னம் என்பவள்
“இவ்வளவு நேரம் ஏன்?” என்ற கேட்டாள்.

" வீட்டில் இன்று வேலை அதிகம்,
அதனால் தாமதம் ஆனது” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/41&oldid=1069539" இலிருந்து மீள்விக்கப்பட்டது